இனிப்பு வகைகள்

வரகு இனிப்பு பொங்கல்

நா.நாச்சாள்

தேவையானவை:
வரகரிசி - 1 கிண்ணம்
பாசிபருப்பு - அரை கிண்ணம்
நாட்டு சர்க்கரை  - 1 1/2 கிண்ணம்
ஏலக்காய் - 2
முந்திரி பருப்பு - 10
உலர்ந்த திராட்சை - 10
பசு நெய் - கால் கிண்ணம்

செய்முறை:

வரகரிசி, பருப்பை கழுவி 1 கிண்ணத்துக்கு 2 1/2 கிண்ணம் வீதம் தண்ணீர் சேர்த்து மண் பானையில் வேகவிடவும். 5 நிமிடத்திற்கு ஒருமுறை நன்கு கிளறி விட்டு மூடிவைத்து சிறு தீயில் 15 - 20 நிமிடம் வேக விடவும்.

பருப்பும் வரகரிசியும் நன்கு வெந்த பின் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறவும்.
நாட்டு சர்க்கரை  அந்த சாதத்தின் சூட்டிலேயே இளகிவிடும். இது செய்யும் போதே தாளிக்கும் கரண்டியில் 1 தேக்கரண்டி பசு நெய்யை சற்று சூடு படுத்தி ஏலக்காயை நசுக்கி சேர்த்து அதனுடன் உலர்ந்த திராட்சை முந்திரியைச் சேர்த்து சிவக்க வறுத்து நெய்யுடன் பொங்கலில் சேர்க்கவும்.

பின் மீதியுள்ள நெய்யை விட்டு பொங்கலை நன்றாக  கிளறி அடுப்பை சிம்மில் வைத்து கிளறி நாட்டுச்சர்க்கரையின் வாசம் போனதும் இறக்கி பரிமாறலாம்.
தைத் திருநாள் பொங்கலுக்கு நமது பாரம்பரிய சிறுதானிய அரிசியில் பொங்கல் செய்து உண்பது சிறப்பானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்பூரை வென்றது டெல்லி!

கிருஷ்ணாபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற விஏஓ உயிரிழப்பு

லாபா அசத்தல்; பிரிட்ஸ் அதிரடி: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி

டிரம்பப்பின் போா் நிறுத்த திட்டம்: எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு

நிதியுதவி கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

SCROLL FOR NEXT