கேரட் பிரதமன்
செய்முறை: தேங்காயைத் துருவி மூன்றுமுறைப் பாலை தனித்தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:34 PM
தேவையானவை:
கேரட் - 1/4 கிலோ
வெல்லம் - 1/4 கிலோ
Advertisement
தேங்காய் - 2
நேந்திரம்பழம் - 1
செய்முறை: தேங்காயைத் துருவி மூன்றுமுறைப் பாலை தனித்தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டைத் துருவி நன்றாக வேக வைத்து வெல்லத்தைப் போட வேண்டும். வெல்லம் வாசனைப் போன பிறகு இரண்டாவது, மூன்றாவது பாலைவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின் பழத்தை நறுக்கிப் போட வேண்டும். பின் முதன் முதலாக எடுத்த தேங்காய்ப் பாலை விட்டு ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்க வேண்டும்.