வாழைத்தண்டு பச்சடி
செய்முறை: வாழைத்தண்டு, இஞ்சி, கொத்துமல்லி மூன்றையும் சிறியதாக வெட்டிக் கொள்ளவும். அதில் புளிக்காத தயிர்,
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:34 PM
தேவையான பொருள்கள்:
வாழைத்தண்டு - 1 துண்டு
இஞ்சி - 10 கிராம்
Advertisement
புளிக்காத தயிர் - 1 டம்ளர்
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாழைத்தண்டு, இஞ்சி, கொத்துமல்லி மூன்றையும் சிறியதாக வெட்டிக் கொள்ளவும். அதில் புளிக்காத தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால் வாழைத்தண்டு பச்சடி தயார். இந்த வாழைத்தண்டு பச்சடி உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். சிறுநீரகத்துக்குச் சிறந்தது. குழந்தைகள் விரும்பி உண்ணும் சிறந்த உணவு.