தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
மைதா - 11/2 தேக்கரண்டி
சோள மாவு - 3 தேக்கரண்டி
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை: முதலில் பன்னீரை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, அரிசிமாவு மற்றும் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்க்க வேண்டும். பிறகு, இஞ்சிப் பூண்டு விழுது, உப்பு, சோயா சாஸ் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த மாவில் பன்னீர் துண்டுகளைப் போட்டு புரட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், பன்னீர் துண்டுகளை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து, அதன் மீது சிறிது எலுமிச்சைச்சாறு பிழிந்தால் பன்னீர் 65 ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.