சமையல் டிப்ஸ் ...
- சப்பாத்தி மாவில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவை கூடும். எளிதாகப் பிசையவும் வரும்.
- சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது மசாலாவுடன் ஒரு தேக்கரண்டி அரிசிமாவையும் சேர்த்து அத்துடன் கிழங்கைப் போட்டு நன்கு பிசறிவிட்டு வறுத்தால் மொறு மொறுப்பாக இருக்கும். சுவையும் கூடும்.
- பச்சைப் பட்டாணி அதன் இயல்பு நிறத்திற்கு வர வேண்டும் என்றால் அதை வேக வைக்கும் போது சிறிதளவு சர்க்கரையைத் தூவ வேண்டும்.
- தோசைமாவில் பச்சை மிளகாய் ஒன்றைக் கீறிப் போட்டு வைத்தால் மாவு எளிதில் புளிக்காமல் இருக்கும்.- அமுதா அசோக்ராஜா
- தக்காளி சாதம் செய்யும் போது தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- ரவா தோசை வார்க்கும் போது, மாவில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்தால் தோசை சிவப்பாக மொறு மொறுவென இருக்கும்.
- மாவு தோசையின் மீது மல்லி, புதினா கீரையை தூவி ஊற்றினால் சுவையாக இருக்கும்.- பி.கவிதா
வெள்ளை எள்ளை வறுத்துப் பொடித்து, பொட்டுக்கடலை மாவு ஒரு கிண்ணம் இரண்டையும் கலந்து மில்க் மெய்ட் விட்டு லட்டுகளைப் பிடித்தால் சூப்பராக இருக்கும். வடிவமும் மாறாது இருக்கும்.
லட்டு செய்வதற்கான கடலைமாவு கரைசல் தோசை மாவு பதத்தில் இருந்தால்தான் பூந்தி முத்து முத்தாக வரும்.
குழம்பில் காரம் அதிகமாகி விட்டால், ஒரு தக்காளிப் பழத்தைப் பிழிந்து விட்டு, ஒரு கலக்கு கலக்குங்கள். காரமும் குறைந்துவிடும். டேஸ்ட்டும் கூடுதலாக இருக்கும்.
பீன்ஸ் வதங்கி விட்டால், அவற்றைக் குளிர்ந்த நீரில் போட்டு வைத்து, பிறகு எடுத்து சமைத்தால் புத்தம் புது பீன்ஸில் செய்தது போன்றே இருக்கும்.
அன்னாசிப் பழத்தை வெட்டி, சிறுசிறு துண்டுகளாக்கி, அவற்றை கேசரியில் போட்டுச் சாப்பிட்டால் சூப்பர் சுவையில் கேசரி அசத்தும்.- அமுதா அசோக்ராஜா
பூரி கரகரப்பாக நீண்ட நேரம் இருக்க வேண்டு மென்றால் கோதுமை மாவுடன் சிறிது சாதம் வடித்த கஞ்சியை சேர்த்தால் பக்குவமாகவும், பதமாகவும் இருக்கும்.
முட்டைக் கோஸ், காலிஃபிளவர் சமைக்கும் போது சிறிது இஞ்சியை சேர்த்துக் கொண்டால் அந்தக்காயில் இருந்து வரும் ஒரு வித வாசனை அகலும்.- கே.எல். புனிதவதி