முகப்பு
சைவ வகைகள்

எலுமிச்சை ரசம்

பூண்டு, மிளகு, சீரகம், மல்லி விதை, மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்

Updated On : 10 மே, 2016 at 12:36 PM
பகிர்:

தேவையான பொருள்கள் :

எலுமிச்சை - 2

தக்காளி -  1

Advertisement

மிளகு  - 1 தேக்கரண்டி

சீரகம்  - 1 தேக்கரண்டி

மல்லிவிதை  1 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

மிளகாய் வற்றல்  -  1

மஞ்சள் தூள் - கால்  தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்துமல்லி - கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 2  தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டு பிசைந்து கொள்ளவும். பூண்டு, மிளகு, சீரகம், மல்லி விதை, மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.  எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு  பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளிச் சாறு,    அரைத்த மசாலா, மற்றும்  பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்பு  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பின்னர் தக்காளி மசாலா கலவையை சேர்த்து மிதமான  தீயில் வைக்கவும். ரசம்  நுரைத்து கொதி வரும் சமயம் எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கி மூடி விடவும். சுவையான  எலுமிச்சை ரசம் ரெடி. ரசம் அதிகம் கொதித்துவிட்டால் கசந்துவிடும்.

***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.