சைவ வகைகள்

வல்லாரைக்கீரை கூட்டு

வல்லாரைக்கீரையைச்  சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தவநிதி


தேவையானவை :

வல்லாரைக்கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு -  1 கைப்பிடி அளவு
தக்காளி  - 1
சின்ன வெங்காயம் - 5
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள்  - கால் தேக்கரண்டி
வறுத்து அரைக்க:
உளுத்தம்பருப்பு - 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
துருவிய தேங்காய் -  சிறிதளவு

தாளிக்க:
நெய்   -  1 தேக்கரண்டி
கடுகு,  கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

வல்லாரைக்கீரையைச்  சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அதனுடன் பாசிப்பருப்பு, தக்காளி, வெங்காயம், மஞ்சள்தூள்   அனைத்தையும்   குக்கரில் போட்டு வேக வைத்து இறக்கவும்.

பின்பு  கடாயில்  வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அதே கடாயில்  நெய்   ஊற்றி கடுகு,  மற்றும் கறிவேப்பிலை  தாளித்து வேகவைத்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து அதனுடன் அரைத்து வைத்திருக்கும் கலவை மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

வல்லாரைக்கீரை கூட்டு ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT