முகப்பு
சைவ வகைகள்

சாமை பொங்கல்

Updated On : 8 பிப்ரவரி, 2017 at 12:00 AM
பகிர்:

தேவையான பொருட்கள் :
சாமை அரிசி - 1 டம்ளர்
பாசிப்பருப்பு - 1 குழிக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கவும்)
நெய் -  தேவைக்கேற்ப (100 கிராம்)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

அரிசி, பருப்பு, இரண்டையும் களைந்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 4 விசில்விட்டு குழைய வேக வைக்கவும். பிறகு  வாணலியில் நெய் விட்டு நெய் காய்ந்ததும் மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி தாளித்து கடைசியில் பெருங்காயப்பொடி, கறிவேப்பிலைச் சேர்த்து பொங்கலில் கொட்டி உப்பு சேர்த்து கிளறவும்.  சத்தான சாமை பொங்கல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.