சைவ வகைகள்

கேழ்வரகு இட்லி

தவநிதி

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 2 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - முக்கால் கிண்ணம்
உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை :

உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும். கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன்   அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து,
அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். (மிகவும் நீர்விட்டு கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.  மாவு புளித்த பின்னர்  இட்லி பாத்திரத்தில் இட்டு சுட்டு எடுக்கவும். சத்தான  கேழ்வரகு இட்லி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT