சைவ வகைகள்

கன்னட ஸ்பெஷல் கீரை சொப்சாரு

ராதா சுதர்ஸன்

தேவையானவை:

முளைக்கீரை இளசானது - ஒரு கட்டு.
துவரம் பருப்பு - 1 ஆழாக்கு
நாட்டுத் தக்காளி - 6
வெங்காயம் -  1 பெரியது
மிளகாய் வற்றல் - 2
பூண்டு - 5 பல்
புளி - கொட்டைப் பாக்கு அளவு
கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை:

முளைக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து  பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் துவரம் பருப்பு,  நறுக்கிய நாட்டுத்தக்காளி, வெங்காயம்,  பூண்டு, புளி எல்லாம் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.  

கீரை வெந்ததும் இறக்கி வைத்து கடுகு,  மிளகாய் வற்றல் தாளிக்கவும். பின்பு கடையவும்.

கீரை சொப்சாரு தயார்.  இதற்கு வற்றல் வடகம், அப்பளம் பொரித்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

SCROLL FOR NEXT