சைவ வகைகள்

கறிவேப்பிலை, எள்ளு சாதப் பொடி

லட்சுமி ராமன்

தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கிண்ணம்
கறுப்பு எள் - கால் கிண்ணம்
உளுத்தம் பருப்பு - கால் கிண்ணம்
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
நல்ல எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

கறிவேப்பிலையை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி பின் காற்றில் நன்றாக உலர்த்தவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயம் சேர்த்து மிளகாய் வற்றல் தாளித்து அத்துடன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு, எள் சேர்த்து வெடிக்கும் வரை வறுக்கவும். அடுத்து கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ( அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்).  பிறகு, வறுத்த கலவைகள் சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கறிவேப்பிலை, எள்ளு சாதப் பொடி தயார். சூடான சாதத்தில் போட்டு சிறிது நல்லெண்ணெய்விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். சத்து நிறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT