இசை

கலா ரசிகனின் இசை உலா-1

மார்கழி பிறந்தால்தான் "இசை உலா' தொடங்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயமா? இசை உலா இல்லாமல் இசை விழா களை கட்டாதே என்றெல்லாம் வாசகர்கள் கேட்கத் தொடங்கிவிட்டதற்குப் பிறகும் நாம் வாளாவிருத்தல் நியாயமல்ல.

கலா ரசிகன்

மார்கழி பிறந்தால்தான் "இசை உலா' தொடங்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயமா? இசை உலா இல்லாமல் இசை விழா களை கட்டாதே என்றெல்லாம் வாசகர்கள் கேட்கத் தொடங்கிவிட்டதற்குப் பிறகும் நாம் வாளாவிருத்தல் நியாயமல்ல.
 "இசை உலா' தொடங்கும்போதே, நமது கர்நாடக சங்கீத வித்வான்களுக்கும், வித்வாம்சிகளுக்கும், சங்கீத சபா நிர்வாகிகளுக்கும் "தினமணி' சார்பில் இரண்டு வேண்டுகோள். முதலில், கலைஞர்கள் பாடும்போது இன்ன ராகம், இன்னாரின் சாகித்யம் என்று வெளியிடும் அறிவிப்புகளை தயவுசெய்து தமிழில் அறிவியுங்கள் என்பது. வெளிநாடுகளில் ஆங்கிலத்தில் அறிவிப்பதில் அர்த்தமிருக்கிறது. இங்கே என்ன அன்னிய நாட்டவர்களா கச்சேரி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்?
 நமது கர்நாடக சங்கீத ரசனையின் சூட்சுமமே, பாடகர் இன்ன ராகம் இசைக்கிறார் என்பதை ரசிகர்கள் யூகித்துத் தெரிந்து, ஆனந்திக்க வைப்பதுதான். அதனால், என்ன ராகம் பாடினோம், யாருடைய சாகித்யம் போன்ற அறிவிப்புகளை அந்த உருப்படி பாடி முடிந்த பிறகு அறிவிப்பதுதான் சரியாக இருக்கும் என்பது நமது கருத்து. பாடுவதற்கு முன்பே அறிவித்து, ரசிகர்களின் கற்பனைக்குத் தடை போடாதீர்கள் என்பது இரண்டாவது வேண்டுகோள்.

இசை உலா தகவல்கள் உதவி: ஜெயஸ்ரீ,   சந்திரிகா ராஜாராம்
படங்கள்: பி. ராதாகிருஷ்ணன்,  அண்ணாமலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT