இசை

ஸ்ருதி சுத்தம், சுக சங்கீதம்...

அசாத்தியமான சாரீரம். நிறைவான வித்வத். சுகமான சங்கீதம். இவையெல்லாம் ஒருசேர அமைவது அதிருஷ்டம். அந்த அதிருஷ்டம் டாக்டர். ராதா பாஸ்கருக்கு அமைந்திருக்கிறது. ஒரு தடவை இவருடைய சங்கீதம் கேட்டவர்கள் அடுத்த தடவை தேடிச் சென்று கேட்க நினைக்கும் ரகம். ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி

கலா ரசிகன்

அசாத்தியமான சாரீரம். நிறைவான வித்வத். சுகமான சங்கீதம். இவையெல்லாம் ஒருசேர அமைவது அதிருஷ்டம். அந்த அதிருஷ்டம் டாக்டர். ராதா பாஸ்கருக்கு அமைந்திருக்கிறது. ஒரு தடவை இவருடைய சங்கீதம் கேட்டவர்கள் அடுத்த தடவை தேடிச் சென்று கேட்க நினைக்கும் ரகம்.
 ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா சார்பில் ஆர்.கே. சுவாமி அரங்கத்தில் ராதா பாஸ்கரின் இசைக் கச்சேரி. கல்யாணி சங்கர் வயலின். கிருஷ்ணமாச்சாரி மிருதங்கம். நங்கநல்லூர் சுவாமிநாதன் கடம். வழக்கம்போல பக்கவாத்தியங்களும் ராதா பாஸ்கருக்கு இசைவாக அமைந்துவிட்டதால் நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது.
 "நாட்டைக் குறிஞ்சி' ராக வர்ணத்துடன் தனது நிகழ்ச்சியை ராதா பாஸ்கர் தொடங்கி, புலியூர் துரைசாமி அய்யரின் "நாட்டை' ராக சாகித்யமாக "சரஸீருக' பாடத் தொடங்கிய அந்த நொடியிலேயே கச்சேரி களைகட்டத் தொடங்கிவிட்டது.
 "மலயமாருதம்' ராகத்தை ஆலாபனை செய்தபோதே, அடுத்து வரப்போவது "மனசாயெட்லோ' கீர்த்தனம்தான் என்பது தெரிந்துவிட்டது. ஸ்வரம் மட்டும் பாடிவிட்டு, "ரீதி கௌளை' ராகத்தில் தியாகய்யர் புனைந்திருக்கும் "பாலே பாலேந்து பூஷணி' என்கிற சாகித்யத்தை இசைத்தார் ராதா.
 இந்த சாகித்யத்தில் ஒரு விசேஷமுண்டு. தியாகய்யர் கீர்த்தனைகள் பெரும்பாலும் தெலுங்கில்தான் அமைந்திருக்கும். சம்ஸ்கிருதத்தில் உள்ள கீர்த்தனைகள் சிலதான். அதில் இதுவும் ஒன்று. பல்லவி, அனுபல்லவி எல்லாமே சம்ஸ்கிருதத்திலும், கடைசியில் சில வரிகள் மட்டுமே தெலுங்கிலும் அமைந்த சாகித்யம் இது.
 நல்ல விஷய ஞானம் இல்லாதவர்கள் "ஜோதிஸ்வரூபிணி' போன்ற ராகங்களைத் தேர்ந்தெடுத்துப் பாட முன்வர மாட்டார்கள். சண்முகப்ரியாவைப் போலவே இருக்கும் இந்த ராகம். கத்துக்குட்டிகளை ஏமாற்றிவிடும். விஸ்தாரமாக "ஜோதிஸ்வரூபிணி' ராகத்தை ஆலாபனை செய்து, கோட்டீஸ்வர அய்யர் இயற்றிய "கான அமுதபானம்' என்கிற சாகித்யத்தை இசைத்தார் ராதா பாஸ்கர். நிரவலுக்குப் போகாமல் ஸ்வரம் மட்டும் பாடினார்.
 "கன்னட' ராகத்தில் சுவாதித் திருநாளின் சாகித்யம் ஒன்றைப் பாடிவிட்டு, விஸ்தாரமாக "கீரவாணி' ராக ஆலாபனையில் இறங்கினார். ஜி.என்.பி. இயற்றிய "நீ சரணாம்புஜமுனு' என்கிற சாகித்யம். நிரவல், ஸ்வரம் என்று ஜமாய்த்துவிட்டார். "ஸ்ரீபுராரி ராணி  கீரவாணி என்கிற இடத்தில் நிரவல், ஸ்வரம். ஸ்வரப்ரஸ்தாரங்களில், எடுத்த எடுப்பிலேயே இரண்டாம் காலத்துக்குப் போனபோது "சபாஷ்' சொல்லத் தோன்றியது. ஓர் அஷ்டபதி பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ராதா பாஸ்கர்.
 கல்யாணி சங்கரின் வயலின், ராதாவின் சங்கீதத்துடன் இசைந்து பயணித்ததுதான் இந்தக் கச்சேரியின் வெற்றி. ஸ்ருதி சுத்தமான சாரீர பலமும், விறுவிறுப்பான சங்கீதமும் ராதா பாஸ்கருடையது என்றால், ஜாடிக்கு மூடியாக இசைந்து நின்றது வயலின். மிருதங்கமும், கஞ்சிராவும்கூட அப்படியே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT