சினிமா எக்ஸ்பிரஸ்

மேக் ஸென்னட்! இவரும் ஒரு பிரபல காமெடியன்!

காமெடி என்றதுமே நமக்குச் சார்லி சாப்ளின் தான் நினைவுக்கு வருகிறார். ஆனால் அவருக்கு முன்பே திரைப்படத்தில்

உமா ஷக்தி.

காமெடி என்றதுமே நமக்குச் சார்லி சாப்ளின் தான் நினைவுக்கு வருகிறார். ஆனால் அவருக்கு முன்பே திரைப்படத்தில் நகைச்சுவை புகுத்திய ஒரு திறமைசாலி இருந்தார்.

மேக் ஸென்னட் என்பது அவர் பெயர். 1880-ல் பிறந்து 1960 வரை வாழ்ந்தவர்.

விசித்திரமாக முகத்தைச் சுளிப்பது, கோமாளித்தனமாக நடப்பது, விழுந்து எழுவது, இப்படிப்பட்ட நகைச்சுவையை ஸ்லாப்ஸ்டிக் காமெடி என்கிறோம்.

1909-ல் ஸென்னட் திரையுலகில் நுழைந்த காலத்திலேயே இந்த ஸ்லாப்ஸ்டிக் காமெடியின் செல்வாக்குக் குறையத் தொடங்கியிருந்தது.

எனவே, நகைச்சுவையை ஏற்படுத்த அவர் உடல் அசைவய் நம்பி இருக்கவில்லை. வசனத்தில் சிரிக்க வைத்தாரா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. அவர் கையாண்டது ஒரு நூதனமான முறை.

மனிதர்கள் எல்லோரிடமுமே ஒரு சில பொதுவான பலவினங்கள் உண்டு.

அடுத்த வீட்டுக்காரன் உடுத்தியிருக்கும் புதிய சட்டையைப் பார்த்து பெருமூச்சு விடுகிறான் ஏழை.

பக்கத்துப் பங்களாக்காரன் வாங்கியிருக்கும் ஃபாரின் கார் மாதிரி கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறான் பணக்காரன்.

பொறாமை, மூடநம்பிக்கை, முன் யோசனை இல்லாமை….இப்படி எத்தனையோ!

படிப்பு, பணம், பதிவி முதலிய போர்வைகளைத் தூக்கி எறிந்துவிட்டுப் பார்த்தால், அடிப்படையில் மனித குணங்கள் எல்லாம் ஒன்று போலவே இருப்பதைக் காணலாம்.

ஸென்னட்டின் நகைச்சுவை இதைத் தான் கூறியது. ‘நாம் எப்படிப் பாசாங்கு செய்தபோதிலும் நாம் எல்லோரும் நாமாகவே இருக்கிறோம். ஒரு கணம் இந்த முகமூடிகளைக் கழற்றி வைப்போமே?’

சமூகத்திலுள்ள எல்லாவகை மனிதர்களையும் தன் காமெடியின் வாயிலாக கேலி செய்தார் ஸென்னட்.

அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ஓர் அர்த்தத்தை கண்டார்கள் பார்வையாளர்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் பொருளில் இருப்பதை உணர்ந்தார்கள்.

அவர் வெறும் நகைச்சுவை நடிகர் அல்லர். ஒரு தத்துவ ஞானி. சிரிக்க வைக்கும் வேலையை மட்டுமே அவர் செய்யவில்லை. என்றெல்லாம் அவரைக் கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

(இயக்குநர் ப.நீலகண்டன் ‘மக்களின் மனோபாவம்’ என்ற தொடரில் பகிர்ந்து கொண்ட எண்ண அலைகள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT