சினிமா எக்ஸ்பிரஸ்

என் உள்ளத்தில் வாழும் ரபி – ஜேசுதாஸ்

அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கீறேன். ரபி பாடிய டிஸ்க்குகளைப் போட்டுக்கேட்டுக் கேட்டு அவருடைய

உமா ஷக்தி.

அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கீறேன். ரபி பாடிய டிஸ்க்குகளைப் போட்டுக்கேட்டுக் கேட்டு அவருடைய ஸ்டைலைத்தான் நான் இமிடேட் பண்ணினேன். என்னுடைய 12-வது வயதிலே, ஸ்கூலில் நடந்த காம்பிடேஷனில் கலந்து கொண்டபோது ரபியின் பாடல்களைப் பாடித்தான் பரிசு பெற்றேன். எந்த மொழிப் பாடல்களைப் பாடினாலும் எனக்கு அவருடைய ஸ்டைல்தான் வரும்.

1960-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். திருவனந்தபுரத்திற்உ ஒரு புரோகிராமுக்கு ரபி வந்திருந்தபொழுது கூட்டத்தில் தொலைவில் நின்று அவரைப் பார்த்திருக்கிறேன். பம்பாய் சண்முகானந்தா சபாவில் நானும் அவரும் பாட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டபொழுது என் மானசீகக் குருவான அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறேன். ரபி பாடிய 6, 7 படங்களில் நானும் பாடியிருக்கிறேன்.

ரபியைக் கடைசியாகச் சந்தித்தது 79 டிசம்பர், மியூசிக் டைரக்டர் ரபீந்தர் ஜெயின் வீட்டில். ரிகர்சலுக்காகச் சென்றிருந்தேன். ரபியும் வந்திருந்தார். ‘தான்சேன்’ படத்தில் நான் பாடியிருந்த பாடலை ஜெயின் அவருக்குப் போட்டுக் காட்ட, ரபி என்னைப் பாராட்டி மகிழ்ச்சியுடன் ஆசிர்வதித்தார்.

‘ஜிந்தகி பர்னஹி பூலே ஹீ ஓ பர்ஸாத் கீராத்’ என்று ரபி பாடியிருக்கும் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் அதில் குழைந்து, இழைந்து வரும் இனிமைக்குக் காரணம் இசையமைப்பாளர் ரோஷனா அல்லது ரபியா என்று தெரியாமல் நான் குழம்புவது வழக்கம். அவ்வளவு அருமையான பாட்டு.

ரபி சுருக்கமாகப் பேசுவார். புன்னையுடன் இருப்பார். அடக்கமானவர். உணவில் கட்டுப்பாடுடையவர். புகை பிடிக்கமாட்டார். குடிக்க மாட்டார். இக்கால இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய உயர்ந்த மனிதர்.

ரபி திடீர் மரணமடைந்தபொழுதி நான் பம்பாயில்தான் இருந்தேன். போகலாமா வேண்டாமா என்று நீண்ட நேரம் போராடினேன். கடைசியில் போவதில்லை என்று தீர்மானித்தேன். அவருடைய சடலத்தைப் பார்த்தால் ஏற்கனவே என் மனத்தில் பதிய வைத்திருக்கும் அவருடைய இனிமையான உருவம் மாறிவிடும் என்று நினைத்தேன். அதை மாற்ற, நினைவை அழித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

ரபி எப்பொழுதும் போல் என்னிடம் இருக்கட்டும்.

கேட்டவர் - வானமுதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

SCROLL FOR NEXT