சினிமா எக்ஸ்பிரஸ்

துணி தைக்கிறார் நடிகை சுமித்ரா!

உங்கள் வீட்டில் உள்ள பொருட்களில் முக்கியமானதாக நீங்கள் கருதுவது எதை? என்ற கேள்வியோடு சில

உமா ஷக்தி.

உங்கள் வீட்டில் உள்ள பொருட்களில் முக்கியமானதாக நீங்கள் கருதுவது எதை? என்ற கேள்வியோடு சில நடிகைகளின் வீடுகளில் திடீரென்று நுழைந்தோம்.

சுமித்ரா வீட்டிற்குள் நுழைந்தபோது வரவேற்பறைக்கு அடுத்த அறையில் தையல் மெஷினில் மும்முரமாகத் தைத்துக் கொண்டிருந்தார் சுமித்ரா.

அவர்கள் வீட்டில் பட்டாளம் எதுவும் இல்லை என்றாலும் இருப்பவர்களது துணிகளை அவரேதான் தைக்கிறார். ஷோரூம் ஒன்றைத் திறந்து வைத்த போது சுமித்ராவுக்கு அன்பளிப்பாகக் கிடைத்தது அந்தத் தையல் மெஷின். ‘சும்மாக் கிடக்கிறதே என்று பழக ஆரம்பித்தது இப்போது மிகவும் உதவியாக இருக்கிறது. எனக்குப் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தைப்பதும் வீணை வாசிப்பதும்தான் எனது பொழுது போக்கு’ என்ற அவரிடம், அதிர்ஷ்டப் பொருள் அதுதானா? என்று கேட்ட போது –

‘என்னங்க இது? இது தான் அதிர்ஷ்டப் பொருள் என்றால் அதிகமாக நான் தைக்கிறேன் என்று பொருள். அப்படியானால் எனக்கு அவ்வளவாகப் படங்கள் இல்லை என்றுதானே அர்த்தம்? ஆண்டவன் புண்ணியத்தில் அப்படி இல்லை. உண்மையில் எனக்கு மிகவும் ராசியான பொருள் அதோ அந்தச் சிலை தான்’ என்று கூறிவிட்டு ஷோகேஸில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷீல்டுக் குவியல்களுக்கிடையே ஒரு ஒயிட் மெட்டல் பொம்மையைக் காண்பித்தார். அதைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்தார்.

‘1974-ம் வருடம் நிர்மால்யம் என்ற மலையாளப் படத்தில் சிறப்பாக நடித்தத்தற்காக நான் பெற்ற பரிசு இது. மலையாளப் படத் தயாரிப்பாளரும் டைரக்டருமான குஞ்சாகோவின் கைகளால் அளிக்கப்பட்ட இச்சிலை எனக்கு அதிர்ஷ தேவதையாகும். இது வந்த பிறகு பல படங்களில் நடிக்கின்ற வாய்ப்பும் வெற்றி விழா ஷீல்டுகளும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

SCROLL FOR NEXT