சினிமா எக்ஸ்பிரஸ்

சொல்கிறார்கள்!

இந்த சினிமா உலகம் விந்தையானது! ஒரு டைரக்டரின் படம் வெற்றி அடைந்தால் இந்தத் துறையிலுள்ள

உமா ஷக்தி.

இந்த சினிமா உலகம் விந்தையானது! ஒரு டைரக்டரின் படம் வெற்றி அடைந்தால் இந்தத் துறையிலுள்ள சில முக்கியஸ்தர்கள் வாய் திறக்க மாட்டார்கள் படம் தோல்வி அடைந்தாலோ, படம் அவுட்டாமே? ஆள் அவ்வளவுதானா? என்று கேலி செய்வார்கள்!’ என்கிறார் டைரக்டர் துரை.

***

நாகேஷுக்கு மனோரமா ஜோடியாக வாய்த்தது போல இளைய தலைமுறை காமெனியன்களுக்கு ஏற்ற நகைச்சுவை நடிகை அமையாதது பெரிய குறைதான்! எனக்குப் பொருத்தமான நகைச்சுவை ஜோடியைத் தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக் கொண்டே இருக்கிறேன்!’ என்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.

**

திருமணத்துக்குப் பிறகு ஹேமமாலினியின் அழகும், கவர்ச்சியும் கூடி இருக்கிறதாம்! ‘ஜோதி’ படத்தில் சற்று மெலிந்து மிக அழகாக இருக்கிறாராம். ‘தார்ட்’ என்ற படத்தில் இளம் பெண்ணாகவும், வயோதிக பெண்மணியாகவும் இரு வேடங்களில் நடித்துள்ள ஹேமமாலினியைப் பற்றிய புதிய செய்தி-விரைவில் அவர் டைரக்டராகப் போகிறார்!

**

பாரதிராஜாவுக்கு முன்னால் பாக்யராஜ் சிகரெட் பிடிப்பதில்லை! சென்னை பிலிம் சேம்பரில் நிகழ்ந்த தயாரிப்பாளர்கள் டைரக்டர்களது அவசரக் கூட்டத்திற்கு இருவரும் வந்திருந்தார்கள்! அப்போது இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

SCROLL FOR NEXT