சினிமா எக்ஸ்பிரஸ்

அவர் ஒரு மாமனிதர் - கமலஹாசன்

அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்த நான்,மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி என் காதுகள் வழியாக கேட்ட செய்திகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்த சமயம்

கவியோகி வேதம்

அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்த நான்,மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி என் காதுகள் வழியாக கேட்ட செய்திகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்த சமயம்.

கேட்ட செய்திகளெல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர் என்னை அருகில் அழைத்தார்.

நான் நெருங்கிச் சென்று வணங்கி விட்டு, என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ஏன்ப்பா..இப்படி ரொம்ப ஒல்லியா இருக்கே..? உடம்பு நல்லா இருந்தா ஹீரோவா நடிக்கலாமே.. என்று அவர் சொன்னார்.

இதை அவர் என்னிடம் சொல்லியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் அத்துடன் விடவில்லை. தொடர்ந்து அறிவுரை கூறினார்.

நல்லா கலரா இருக்கே..அறிவு இருக்கு. நடனம் தெரியுது.உடம்பை நல்லவிதமா வைச்சுகிட்டா சீக்கிரமே முன்னுக்கு வந்துடலாம்.அசிஸ்டெண்டாவே இருந்துடக் கூடாது.இதைச் செய்துகிட்டே உன்னை நீ வளர்த்துக்கனும். இப்படி சொல்லிவிட்டு, "என்னென்ன எக்சர்சைஸ் செய்யறே?" என்று கேட்டார்.

நான் என்ன எக்சர்சைஸ் செய்கிறேன் என்பதைச் சொன்னேன்.

"ஹூகும்..அப்படியெல்லாம் செய்யக் கூடாது.. தப்பு! எக்சர்சைஸ் செய்வது முறையோடு ஒழுங்கா தொடர்ந்து செய்யனும்" என்று சொல்லிவிட்டு, அவர் பத்து எக்சர்சைஸ்களை எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து அவரோடு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது,ஒவ்வொரு நாளும் என்னை சந்திக்கும் போதெல்லாம், " என்ன எக்சர்சைஸ்.. ஒழுங்கா. செய்யறியா..?" என்று கேட்பார்.

நான் சொல்வதை பரிவோடு கேட்டு ஏதாவது குறை தென்பட்டால் திருத்துவார். எக்சர்சைஸ்கள் செய்வது குறித்து விளக்கமாக சொல்லித் தருவார்.

இதற்குப் பிறகு "நான் ஏன் பிறந்தேன்?" என்ற ஒரு படம் செய்த பின்பு, அவரோடு எனக்கு அதிகத் தொடர்பு இல்லை.அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

சில வருடங்கள் சென்றன. உடம்பில் சதைப்பிடிப்பு ஏற்பட்டது.எம்.ஜி.ஆர் சொல்லித் தந்த எக்சர்சைஸ்களை தொடர்ந்து செய்து கொண்டே வந்தேன். இப்போது இருக்கும் உடற்கட்டு வந்ததுக்கு காரணம் எம்.ஜி.ஆர்தான்.

என்னைப் பார்த்து விட்டு,அதன் பின்னர் எம்.ஜி.ஆர் ரொம்ப மகிழ்ச்சியடைந்து பாராட்டினார். இப்படித்தான் இருக்கணும் என்று தட்டிக் கொடுத்தார்.

அப்பொழுதுதான் நான் என் காதுகளில் விழுந்து, மனதில் குழப்பத்தை ஏற்படுத்திய வார்த்தைகளைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு ஹீரோவோ இன்னொரு நடிகனோ முன்னுக்கு வரக்  கூடாது என்று நினைக்கக் கூடியவராக இருந்தால் கண்டிப்பாக இப்படியெல்லாம் உள்ளன்போடு பழகியிருக்க மாட்டார். அப்புறம் ஏன் இப்படியெல்லாம் அவரைப் பற்றி  இல்லாததைச் சொல்லுகிறார்கள்?

அவரை பற்றி அப்படிச் சொன்னதெல்லாம் அபத்தம் பொய் என்பது நான் அறிந்த அனுபவ உண்மை.

எழுத்து: நாகை தருமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.12.81 இதழ் )  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT