சினிமா எக்ஸ்பிரஸ்

நகைச்சுவை மன்னர்கள் - சோ (மனோரமா)

எனக்குப் பிறகுதான் அவர் நடிக்க வந்தார். "பார் மகளே பார்" நானுவும் சோவும் ஜோடியா சேர்த்து நடித்த முதல் படம்

கவியோகி வேதம்

எனக்குப் பிறகுதான் அவர் நடிக்க வந்தார். "பார் மகளே பார்" நானுவும் சோவும் ஜோடியா சேர்த்து நடித்த முதல் படம்.இன்னும் சொல்லப் போனால் சோவை புதுமுகம்னு யாரும் சொல்ல முடியாது.அந்த அளவுக்கு நடிப்பிலே தேர்ச்சி.என்னை விட அவர் பிரமாதமா நடிச்சார்னு சொல்லலாம்.

நினைவில் நின்றவள், மிஸ்டர் சம்பத்,பொம்மலாட்டம், உண்மையே உன் விலை என்ன?, யாருக்கும் வெட்கமில்லை, சோ நடித்த படங்களிலே எனக்கு ரொம்பவும் பிடித்தவை இவை.

சோவின் இன்னொரு ஸ்பெஷலாலிட்டி பாராட்டுவது. நாடகத்திலோ, சினிமாவிலோ,யார் அருமையாக நடித்தாலும், பெரியவர் சின்னவர் என்று பேதம் பாராமல் பாராட்டுவார்.

ஒருமுறை 'இம்மாத நட்சத்திரம்' என்ற  தலைப்பில் பொம்மலாட்டம் படத்துக்காக  என் நடிப்பைப் பாராட்டி ‘பேசும் படம்’ பத்திரிக்கை கட்டுரை ஒன்றை வெளியிட்டது.அடுத்த இதழில் சோ, ஆசிரியருக்கு, இதைப்பற்றி பாராட்டி கடிதம் ஒன்றை எழுதினார்.அதில் அவர் 'மனோரமா இம்மாத நட்சத்திரம் இல்லை.இந்த தலைமுறையின் நட்சத்திரம்' என்று எழுதினார்.

சோவோட காமெடி ரொம்பவும வித்தியாசமானது.யாரைப் பற்றிக் கிண்டலாக அவர் பேசினாலும், அவர்களே ரசிக்கும்படி இருக்கும்.

பத்திரிக்கை ஆசிரியர் என்ற வகையிலும் பல புதுமைகள் செய்திருக்கிறார்.துக்ளக் பத்திரிக்கையில் வரும் "புகார்" பகுதி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

சினிமா வட்டாரத்தில் அவரால் ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை.'அண்ணே' என்று யாராவது அவரைச் சொன்னால் அவருக்கு அசாத்திய கோபம் வரும்

பேட்டி: சிக்கி

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.07.81 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT