சினிமா எக்ஸ்பிரஸ்

திரைப்பட விழாவில்….

1981 ஜனவரி மூன்றாம் தேதி மாலை 5.30க்கு எட்டாவது உலகத் திரைப் பட விழாவைப் புதுடெல்லி விக்யான்

உமா ஷக்தி.

1981 ஜனவரி மூன்றாம் தேதி மாலை 5.30க்கு எட்டாவது உலகத் திரைப் பட விழாவைப் புதுடெல்லி விக்யான் பவனில் தகவல் ஒலிபரப்பு மந்திரி வசந்த் சாத்தே குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். விளக்கேற்றும் தீபத்தை அவரிடம் கொடுத்தவர் கன்னட நடிகை ரேகாராவ்.

ராஜ்கபூர், சசிகபூர், அமிதாப் பச்சன், சஞ்சீவ்குமார், ரேகா, ஜெயபாதுரி, மிருணாள் சென், பாசு சாட்டர்ஜி, தனுஜா தேவன் வர்மா, ஒ.பி.ரஹ்மான், யாஷ் சோப்ரா ஆகியோர் வந்திருந்தார்கள்.

மஞ்சு பார்கவியைத் தவிர தென்னிந்திய நட்சத்திரம் யாரும் காணப்படவில்லை! கொட்டாரக்காரா, முக்தா சீனிவாசன், அவரது சகோதரர் ராமசாமி, எஸ்.பி..முத்துராமன், விஸ்வனாத், அனந்து, டி.வி.எஸ்.ராஜன் ஆகியோருடன் தமிழ் பத்திரிகை நிருபர்களும் வந்திருந்தனர்.

போட்டிப் பகுதியில் பரிசு பெறும் படங்களைத் தெரிந்து எடுக்கும் குழுவில் மலையாள டைரக்டர் ஜி.அரவிந்தனையும் ஹிந்தி டைரக்டர் ஷியாம் பெனகலையும் தவிர எந்த இந்திய டைரக்டரும் இல்லை.

படத் தயாரிப்பில் முன்னணியிலிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கானடா, ஹங்கேரி, மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த யாருமே தேர்வுக் குழு கமிட்டியில் இடம் பெறவில்லை.

திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட படங்களில் 23 படங்கள் ஏற்கெனவே பலவிடங்களில் பரிசு பெற்றவைகள் தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT