சினிமா எக்ஸ்பிரஸ்

இந்த முகமும் இந்த அழகும் போதுமா?

புதிய சரித்திரம் படைத்த ‘மரோ சரித்ரா’ என் முதல் அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன். விவரம் புரியாத வயதில் ‘டீன் ஏஜ்’ கற்பனைகளோடு கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பாத்திரம் எனக்குக் கிடைக்காததால், ஜஸ்ட் லைக் தட் ரொம்ப

உமா ஷக்தி.

புதிய சரித்திரம் படைத்த ‘மரோ சரித்ரா’ என் முதல் அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன். விவரம் புரியாத வயதில் ‘டீன் ஏஜ்’ கற்பனைகளோடு கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பாத்திரம் எனக்குக் கிடைக்காததால், ஜஸ்ட் லைக் தட் ரொம்ப ஈஸியாகச் செய்தேன். ஏகோபித்த பாராட்டுக்களை அப்படம் எனக்கு வாரி வழங்கியதில், நான் லேசாகக் கர்வப்பட்டுத்தான் போனேன்.’ சொன்னவர் சரிதா.

பிறக்கும் போதே இவர்கள் இன்னின்ன துறைகளில் பிரகாசமாக விளங்குவார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? நடிப்புத் துறையில் நான் சிறந்து விளங்குவேன் என்று யாராவது முன்பே சொல்லியிருந்தார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இயல்பாகவே நடிக்க வேண்டும் என்பதில் ஒரு தீராத தாகம் குழந்தைப் பிராயத்திலிருந்தே என்னுள் வளர்ந்து வந்திருக்கிறது. வயது ஏற, ஏற அந்தத் தாகமே வெறியாகி, மிகச் சரியான சந்தர்ப்பத்தில், சரியான மனிதர் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. திறமையிருந்தால், செய்யும் தொழிலில் நேர்மையிருந்தால், எடுத்துக் கொண்ட காரியத்தில் உண்மையிருந்தால் எதுவும் சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன்.

என்னை அழகி என்று நான் பறை சாற்றிக் கொள்ளவில்லை. என் திறமையை நம்பும் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் அதற்குத் தகுந்த கேரக்டர்களில் நடிக்க என்னை அழைக்கிறார்கள். முதல் படம் கிளாமர் கேளாக அமைந்தது. இனி கிளாமர் ரோல் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசையில்லை. முடியாது என்பதற்காக அல்ல டீன் ஏஜ் வயதில் கிளாமர் ரோல் செய்தால் பொருத்தமாகவும் அழகாகவும்  இருக்கும். முகத்தில் சிறிது முதிர்ச்சி வந்துவிட்ட பிறகு கிளாமர் ரோலுக்கு ஆசைப்படக் கூடாது. காலாகாலத்துக்கு கேரக்டர் நடிகையாக நான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கு இந்த முகமும், இந்த அழகும் போதாதா? புதிதாக எத்தனை பேர் வந்தாலும் இந்த இண்டஸ்ட்ரி ஏற்றுக் கொள்ள காத்திருக்கிறது. அதில் சரிதா தனியாக தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் அழகை விட திறமை தான் மிகப் பெரிய சொத்து என்று நம்புகிறேன்.

-ரமணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT