‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் நடித்திருக்கும் புதுமுகமான விஜயசாந்திக்கு இப்போது ஏகப்பட்ட கிராக்கி என்று சொல்கிறார்கள்.
அந்த இளம் நடிகையின் தாயார் திடீரென்று ஒருநாள் டெலிபோனில் தன் மகள் விஜயசாந்தி ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் எப்படி நடித்திருக்கிறாள் என்று கேட்டு என்னைத் திணறச் செய்துவிட்டார். டெலிபோனில் பதில் சொல்லுவது என்றால் ஏதாவது ஒரு சில வார்த்தைகள் தானே பேசமுடியும்? அதில் முழுநீள விமரிசனம் செய்து கொண்டா இருக்க முடியும்?
இப்படிச் சில நடிகைகளின் தாயாருக்குத் தன் மகளின் முன்னேற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பொங்கிக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் படுசுட்டித்தனமாக நடிக்கும் சில பிஞ்சு நடிகைகள் பிறகு செங்காயாகி வெம்பிப் போவதும் உண்டு. ஆனால் இந்தப் படுசுட்டி விஜயசாதியைப் பொறுத்தவரை அவரை முன்னுக்குக் கொண்டுவர அவரது அன்னையும் சித்தியான விஜயலலிதாவும் பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெயருக்கு முன்னால் ‘விஜய’ இருப்பதால் வருங்காலத்தில் வெற்றி நடிகையாக அவரது பட உலக விஜயம் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் கல்லுக்குள் ஈரம் படத்தில் வெடுக் வெடுக்கென்று அவர் பேசியதுதான் இந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கி இருக்கிறது.
- நவீனன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.