முகப்பு
சினிமா எக்ஸ்பிரஸ்

இந்த பாணியை மாற்ற வேண்டாம் என்றார் எம்.ஜி.ஆர் ! - 'என்னத்தே' கன்னையா

1960-ஆம் ஆண்டு பக்ஷிராஜாவின் 'ஏழை படும் பாடு' படத்தில் நடிக்கத் துவங்கிய 'என்னத்தே' கன்னையா இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:15 PM
பகிர்:

1960-ஆம் ஆண்டு பக்ஷிராஜாவின் 'ஏழை படும் பாடு' படத்தில் நடிக்கத் துவங்கிய 'என்னத்தே' கன்னையா இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.

மதுரை மாவட்டம் அய்யாபட்டி என்ற கிராமத்தில் பிறந்த கன்னையா ஆரம்பத்தில் வைரம் நாடக குழுவில் நடித்து வந்தார்.

40 ஆண்டு காலமாக கலை  உலகில்  பணியாற்றி வரும் கன்னையா தனது அனுபவங்களை நினைவு கூறுகிறார்.     

32 ஆண்டுகளுக்கு முன்பு வைரம் நாடகக்குழுவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது பக்ஷிராஜா படக் கம்பெனியார்  என்னை மூன்று ஆண்டு காலத்திற்கு 'காண்ட்ராக்ட்' போட்டு மாதச் சம்பளம் கொடுத்து அவர்கள் படங்களில் நடிக்க வைத்தனர்.

மாதச் சம்பளத்திற்கு நடித்ததால் ஒரு படத்திலேயே பல்வேறு சிறிய பாத்திரங்களை ஏற்று நடித்தேன். முதல் படமான 'ஏழை படும் பாட்டில்'  நான்கு சிறிய வேடங்களில் நடித்தேன். அதன் பிறகு மதுரையில் இருந்து கோவை சென்று அங்கு நாடகங்களில் நடித்தேன்.

1955-ஆம் வருடம் சென்னைக்கு வந்து  நிரந்தரமாக தங்கினேன்.  தூக்குத் தூக்கி, சதாரம் போன்ற படங்களில் நடித்தேன். முதலாளி படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. அதுவரை அசோசியேட் டைரக்டராக இருந்த சீனிவாசன் (முக்தா) இந்தப்படத்தின் மூலம் டைரக்ட்டரானார். இந்த படத்திற்கு பிறகு எல்லோரும் என்னை 'முதலாளி' கன்னையா என்றே அழைத்தார்கள்.  1967-ஆம் ஆண்டு எனது திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

ராமண்ணா தயாரித்து டைரக்ட் செய்த 'நான்' படத்தில் நான் ஏற்று நடித்த வேடம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதில் அடிக்கடி 'என்னாத்தே' என்ற வார்த்தையை உபயோகிப்பேன். அன்று முதல் என்னை 'என்னாத்தே' கன்னையா என்றே அழைத்தனர்.

பார்வதி பி .ஏ நாடகத்திற்கு தலைமை  வகித்த எம்.ஜி.ஆர் என்னை பாராட்டி பேசினார்.  அந்த நாடகத்தில் நான் நடித்த வேலைக்காரன் வேடத்தை குறிப்பிட்ட அவர், 'வேலைக்காரர் வேடத்தில் இன்று கன்னையா நடித்த அளவிற்கு இன்று பிரபலமாக உள்ள நடிகர்கள் கூட நடித்திருக்க முடியாது. ஏனென்றால் நட்சத்திர நடிகர்கள் தங்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை முன்னால்  வைத்து, தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை பின்னால் தள்ளி வைத்து நடிப்பார்கள்.ஆனால் கன்னையாவோ தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து நடித்தார். இந்த பாணியை மாற்ற வேண்டாம் என குறிப்பிட்டு வாழ்த்தினார். இது என்னால் மறக்க முடியாத சம்பவம் என்றார் கன்னையா.

முழு கட்டுரையைப் படிக்க →