சினிமா எக்ஸ்பிரஸ்

ரஜினியை பார்த்துட்டு , 'ஹூ ஈஸ் திஸ் பாய்? வெரி ஸ்மார்ட்ன்னு சொன்னார் ராஜ்குமார்!

என் அறிமுகங்கள் / ரஜினிகாந்த்  - கே. பாலசந்தர்

DIN

ரஜினிகாந்த்கிட்ட எனக்கு முதல்ல  பிடிச்சது அவரோட ஸ்பீட். தன்னம்பிக்கையோட கூடிய ஒரு அலட்சியம். 'கலாகேந்திரா' ஆபிஸ்ல இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்ட்ஸ குரூப் குரூப்பா வரவழைச்சு பார்த்தப்பவே ரஜினிகிட்ட ஒரு ஸ்பார்க் தெரிஞ்சது. எனக்கு ரஜினி எங்கயோ  போகப் போறார்னு மனசுல தெரிஞ்சு போச்சு.

இந்த ரோல் (அபூர்வ ராகங்கள்) உன்னோட கெபாசிட்டிக்கு நான் தந்த ரோல்னு நினைச்சுக்காத. உனக்குன்னு ஒன்னு வச்சிருக்கேன். அதுக்கு முன்னால உன்ன நானும், என்ன நீயும் நல்லா தெரிஞ்சுக்கணும். அதுக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தனும்கிறதுக்காகத்தான் இந்த சின்ன ரோல் இப்ப தந்திருக்கேன்னு அப்பவே ரஜினிகிட்ட நான் சொன்னேன். ரஜினிக்காக நான் யோசிச்சு வைச்சிருந்த ரோல் 'மூன்று முடிச்சு'.

ஹிந்தி நடிகர் ராஜ்குமாருக்கு 'அபூர்வ ரகங்கள்' படத்தை போட்டுக் காட்டினப்ப,  படத்துல ரஜினியை பார்த்துட்டு , 'ஹூ ஈஸ் திஸ் பாய்? வெரி ஸ்மார்ட்! சொல்லிட்டு அப்படியே பிரம்மிச்சு போய்ட்டார் ராஜ்குமார். ரொம்ப சின்ன ரோல்லயே தன்னைப் பத்தி பேச வச்ச ரஜினியை, சரியான நேரத்துல திசை திருப்பி, ஹீரோவாக்கின பெருமை எஸ்.பி. முத்துராமனையே சாரும்.

பேட்டி: பிரசன்னா

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.11.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

SCROLL FOR NEXT