முகப்பு
சினிமா எக்ஸ்பிரஸ்

'பையனை முழுக்க முழுக்க உங்களை நம்பி ஒப்படைக்கிறேன்'

மறைந்த நடிகர் முத்துராமன் கடந்த அக்டோபர்   19-ஆம் தேதி பெங்களூர் சென்று அங்கிருந்து ஊட்டிக்கு புறப்படுவதற்கு முன்பு, கதாசிரியர் கலைஞானத்திற்கு போன் செய்தார்.

Updated On : 16 செப்டம்பர், 2016 at 1:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:46 PM

மறைந்த நடிகர் முத்துராமன் கடந்த அக்டோபர்   19-ஆம் தேதி பெங்களூர் சென்று அங்கிருந்து ஊட்டிக்கு புறப்படுவதற்கு முன்பு, கதாசிரியர் கலைஞானத்திற்கு போன் செய்தார்.

கலைஞானத்தின் பைரவி பிலிம்ஸ் "இளஞ் ஜோடிகள்" படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.

அலைகள் ஓய்வதில்லை படத்திற்குப் பிறகு கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் படம் இது. படப்பிடிப்பு நடைபெறும் படமும் இது.

Advertisement

அக்டோபர் 20-ஆம் தேதி பிரசாத் ஸ்டூடியோவில் "இளஞ் ஜோடிகள்" படப்பிடிப்பு துவங்க வேண்டும். அனால் அன்று முத்துராமன் ஊரில் இல்லாததாள், கலைஞானத்திற்கு போன் செய்து அதை தெரிவிக்க விரும்பினார்.  

போனில் முத்துராமன் கலைஞானத்திடம "பையனை முழுக்க முழுக்க உங்களை நம்பி ஒப்படைக்கிறேன். அவனை நல்ல முறையில் பயன்படுத்தி, நல்ல பெயரை வாங்கித்  தந்து, பெரும் புகழும்  கொண்டவனாக உருவாக்குவது உங்கள் கடமை.

கராத்தே மணியிடம் சொல்லி பையனுக்கு நல்ல கராத்தே பயிற்சி அளிக்கச் சொல்லுங்கள். டைரக்டர் இராம நாராயணனிடமும் என் பையனை  நல்ல முத்திரையில் தயார் பண்ண நான் கேட்டுக் கொண்டதாக  சொல்லுங்கள். நானும் போன் செய்து கேட்டுக் கொள்கிறேன். 

நீங்கள் படப்பிடிப்பு துவங்கும் 20-ஆம் தேதி நான் ஊரில் இல்லை. 21ஆம் தேதி என் வேலை முடிந்து 22-ஆம் தேதி கண்டிப்பாக வருகிறேன்" என்று கூறினார்.

அவர் கூறியபடியே   22-ஆம் தேதி சென்னை வந்தார். ஆனால் உயிரற்ற சடலமாகத்தான் வந்தார் என்று கண்ணீர் மல்க கலைஞானம் கூறினார் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.