பேருந்து வசதி தேவை
முகப்பேறு மேற்கு பஸ் நிலையத்தில் இருந்து அம்பத்தூர், ஆவடிக்கு செல்ல பஸ் வசதியில்லை.
முகப்பேறு மேற்கு பஸ் நிலையத்தில் இருந்து அம்பத்தூர், ஆவடிக்கு செல்ல பஸ் வசதியில்லை. இதனால் ஜெ.ஜெ. நகர் பொதுமக்கள் அம்பத்தூர் செல்ல ஷேர் ஆட்டோக்களையும், வாவின் பஸ் நிறுத்தம் சென்று பேருந்து ஏறி செல்லும் நிலையும் நீடிக்கிறது.
மேலும் அயப்பாக்கத்தில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கும் பேருந்து வசதியில்லை. பொதுமக்களின் காலவிரயத்தை கருத்தில் கொண்டு ஜெஜெ.நகரில் இருந்து ஆவடிக்கும், அயப்பாக்கத்தில் இருந்து நொளம்பூருக்கும் பேருந்து விட அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.