ஆட்டோக்களில் மீண்டும் கூடுதல் வசூல்
சென்னையில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டு கட்டணம் சீரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
சென்னையில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டு கட்டணம் சீரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருநின்றவூர், வில்லிவாக்கம், தியாகராயநகர், புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.40 வரை கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஆட்டோ கட்டணத்தை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.