திருவொற்றியூர் ரயில் நிலையம் முன்பகுதியில் இருந்த டிக்கெட் கவுன்ட்டர் இடிக்கப்பட்டது. இதன் காரணமாக, மாட்டு மந்தை ரயில்வே கேட் அருகில் இயங்கி வரும் கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட் வாங்க வேண்டியுள்ளது. கரடுமுரடான பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், ரயில் பயணிகள் குறிப்பாக வயோதிகர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், திருவொற்றியூர் ரயில் நிலைய நடைமேடையிலேயே தானியங்கி டிக்கெட் கவுன்ட்டரை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.