ஆராய்ச்சிமணி

நிறுத்தத்தில் பேருந்து நிற்க வேண்டும்

சென்னை அம்பத்தூர் தலைமை தபால் நிலையத்துக்கு மூத்த குடிமக்கள் மாதாந்திர தொகை பெறவும் பல்வேறு அலுவல்களுக்காகவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

DIN


சென்னை அம்பத்தூர் தலைமை தபால் நிலையத்துக்கு மூத்த குடிமக்கள் மாதாந்திர தொகை பெறவும் பல்வேறு அலுவல்களுக்காகவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த இடத்துக்கு அருகே உழவர் சந்தையும் எதிரே தாலுகா அலுவலகம், மின்சார வாரியம், ஆர்டிஓ அலுவலகம், டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை ஆகியவையும் உள்ளன. தபால் நிலையத்துக்கு அருகிலும், எதிரிலும் பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தப் பேருந்தும் நிற்பதில்லை. சற்று தூரத்தில் உள்ள கனரா வங்கி நிறுத்தத்திலேயே பேருந்துகள் நின்று செல்கின்றன. எனவே, இந்த நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்க மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்.வெங்கட்டராமன், திருமுல்லைவாயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

SCROLL FOR NEXT