முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 21 – கோயில் மூத்த திருப்பதிகம் - 1

‘பதிகம்’  என்றால் பத்து பாடல்கள்,  ‘கோயில்’  என்றால் தில்லை. தில்லையில் அருளப்பட்ட பத்து பாடல்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

‘பதிகம்’  என்றால் பத்து பாடல்கள்,  ‘கோயில்’  என்றால் தில்லை. தில்லையில் அருளப்பட்ட பத்து பாடல்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.

இவை அந்தாதிப் பாடல்களாகவும் உள்ளன. அதாவது, முதல் பாடலின் நிறைவுச் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக வரும்.

134

பாடலின்பம்

உடையாள் உன்தன் நடுவிருக்கும்,
உடையாள் நடுவுள் நீயிருத்தி,
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்பதானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும்
அருளைப் புரியாய் பொன்னம்பலத்துஎம்
முடியா முதலே என் கருத்து
முடியும்வண்ணம் முன்னின்றே.

*

முன்னின்று ஆண்டாய் எனை முன்னம்,
யானும் அதுவே முயல்வுஉற்றுப்
பின்னின்று ஏவல் செய்கின்றேன்
பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே,
என் நின்று அருள் இவரநின்று
போந்திடு என்னாவிடில் அடியார்
உன் நின்று இவன் ஆர் என்னாரோ
பொன்னம்பலக் கூத்து உகந்தானே.

பொருளின்பம்

பொன்னம்பலத்துப் பெருமானே, முடிவில்லாத முதற்பொருளே,

உமையம்மை உன் உள்ளத்தில் உள்ளாள், நீ உமையம்மையின் உள்ளத்தில் உள்ளாய், நீங்கள் இருவரும் அடியவனான என் உள்ளத்தில் உள்ளீர்கள், இது உண்மையானால், நான் உன்னுடைய அடியவர்கள் கூட்டத்தின் நடுவே இருக்கும்படி அருள்செய், சிவபெருமானே, என் வேண்டுதலை நிறைவேற்று.

*

பொன்னம்பலத்தில் மகிழ்ந்து கூத்தாடுபவனே, சிவபெருமானே,

முன்பு என்னை அடியவனாக ஏற்றுக்கொண்டு ஆட்சி செய்தாய், நான் உன்னுடைய அருளைப் பெற விரும்பி உனக்குத் தொண்டுகளைச் செய்கிறேன், ஆனால், அவற்றை நான் சரியாகச் செய்யவில்லை, பின்தங்கிவிட்டேன்,

பெருமானே, நீ எனக்கு அருள் செய்து, ‘வா’ எனக் கருணையோடு அழைக்காவிட்டால், மற்ற மெய்யடியார்கள் என்னை ஒதுக்கிவிடமாட்டார்களா? ‘இவன் யார்?’ என்று தள்ளிவிடமாட்டார்களா? அருள்செய்.

சொல்லின்பம்

உடையாள்: சிவனை உடையவள்/ உமையம்மை

இருத்தி: இருப்பாய்

இருவீரும்: இருவரும்

முன்னம்: முன்பு

முயல்வுற்று: முயற்சிசெய்து

பெம்மானே: பெருமானே

போந்திடு: வா/ வந்துவிடு

ஆர்: யார்

முழு கட்டுரையைப் படிக்க →