பகுதி - 210
திண்டிவனம் – மயிலம் – பாண்டி வழியில் அமைந்துள்ள தலம். வக்ரகாளி எனப்படும் காளி கோவில் கொண்டுள்ள தலம். வடிவாம்பிகை உடனமர் சந்திரசேகரர் திருக்கோயிலில்...
திண்டிவனம் – மயிலம் – பாண்டி வழியில் அமைந்துள்ள தலம். வக்ரகாளி எனப்படும் காளி கோவில் கொண்டுள்ள தலம். வடிவாம்பிகை உடனமர் சந்திரசேகரர் திருக்கோயிலில் ஆறுமுகப் பெருமான் பன்னிரு கரங்களோடு மயில்மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறான்.
கல்மரங்களுக்குப் பெயர்போன தலம் திருவக்கரை. இன்றைய பாடல் இத்தலத்துக்கானது. இந்தப் பாடலின் ஈற்றடியான ‘அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே’ என்பதை மனனம் செய்து ஓதவேண்டும் என்று தணிகைமணி குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள் கூறுகிறார். நினைத்தது நிறைவேற உதவும் பாடல்.
தனதன தத்தன தனதன தத்தன
Advertisement
தனதன தத்தன தனதான
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி துரையாதே
கருவழி தத்திய மடுவத னிற்புகு
கடுநர குக்கிடை யிடைவீழா
உலகுத னிற்பல பிறவித ரித்தற
வுழல்வது விட்டினி யடிநாயேன்
உனதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபயம லர்ப்பத மருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு மயில்வீரா
குணதர வித்தக குமரபு னத்திடை
குறமக ளைப்புணர் மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை வுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் பெருமாளே.
</p><p align="justify"></p><p align="justify"><img src="https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif" /><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/258587613&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>