முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 212

தணிகைமணி குகத்திரு வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் தன்னுடைய திருப்புகழ் உரை நூலை வெளியிட்டபோது 1304 பாடல்களே கிடைத்திருந்தன. 

Updated On : 15 ஏப்ரல், 2016 at 11:10 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:31 PM

தணிகைமணி குகத்திரு வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் தன்னுடைய திருப்புகழ் உரை நூலை வெளியிட்டபோது 1304 பாடல்களே கிடைத்திருந்தன.  பின்னால் மேலும் சில பாடல்கள் கிடைக்க, இந்த எண்ணிக்கை மெல்லமெல்ல விரிவடைந்து தற்போது 1330-ஐத் தொட்டிருக்கிறது.  இவற்றுள் சில பாடல்களுக்கு உரை கிடையாது. 

இன்றைய பாடலும் அவ்வாறு கிடைத்த புதிய பாடல்களுள் ஒன்று.  சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை, சேலம் வெளியிட்ட திருப்புகழ் பதிப்பில் இடம் பெற்றுள்ளது.  இந்தப் பாடலுக்கு kaumaram.com தளத்தில் உரை எழுதப்பட்டிருக்கிறது.  (http://kaumaram.com/thiru/nnt1323_u.html).  இந்தத் தளத்திலும் இடம்பெறாத ‘வறுமைப் பாழ்பிணி’ என்ற பாடலுக்கு உரையே இல்லை.  கனடாவைச் சேர்ந்த திருப்புகழ் அன்பர் குஹத்திரு பேராசிரியர் பசுபதி அவர்கள் அந்தப் பாடலை 2004ம் ஆண்டு அனுப்பி, ‘இதற்கு உரை எழுத முடியுமா’ என்று கேட்டிருந்தார்கள்.  அதற்கு அடியேன் எழுதிய உரையை இனிவரும் நாட்களில் தருகிறேன்.  இந்தப் பாடல்களெல்லாம் இன்ன தலத்துக்கானவை என்று வரையறுக்க முடியவில்லை.  பொதுப்பாடல்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.  இன்றைய பாடல், பழநித் திருப்புகழான ‘கருவில் உருவாகிவந்து’ பாடலை ஒத்திருக்கிறது.

தனதன தான தனதன தான
     தனதன தான     தனதான


கருவெனு மாயை உருவினில் மூழ்கி
     வயதள வாக     நிலமீதில்
கலைதெரி வாணர் கலைபல நூல்கள்
     வெகுவித மாக  கவிபாடித்
தெருவழி போகி பொருளெனு மாசை
     திரவியம் நாடி    நெடிதோடிச்
சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி
     சிறுவித மாக     திரிவேனோ
அருளநு போக குருபர னேஉன்
     அடியவர் வாழ  அருள்வோனே
அரனிரு காதில் அருள்பர ஞான
     அடைவினை ஓதி       அருள்பாலா
வெருவிடு சூரர் குலஅடி வேரை
     விழவிடு சாசு    வதிபாலா
மிடலுட லாளர் அடரசுர் மாள
     விடுமயில் வேல       பெருமாளே.

Advertisement

</p><p> </p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/259174862&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.