முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 213

அடியார்களுக்கு அனுபவ நெறியாலே அருளைத் தந்து அவர்களை வாழ்விக்கும் அருளாளனே! சிவனாருடைய

Updated On : 15 ஏப்ரல், 2016 at 11:12 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:32 PM

பதச் சேதம்

சொற் பொருள்

கருவெனு மாயை உருவினில் மூழ்கி வயதள வாக  நிலமீதில்

Advertisement

கருவெனும் மாயை: கருப்பையிலே ஏற்படும் மாயையான;

கலைதெரி வாணர் கலைபல நூல்கள் வெகுவித மாக கவிபாடித்

கலைதெரி வாணர்: சாத்திரங்களை அறிந்த புலவர்கள்; கலைபல நூல்கள்: பலவிதமான கலைகளைச் சொல்லும் நூல்கள்;

தெருவழி போகி பொருளெனு மாசை திரவியம் நாடி  நெடிதோடிச்

திரவியம்: செல்வம்; நெடிது ஓடி: வெகு தொலைவுக்கு ஓடி;

சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி  சிறுவித மாகத்  திரிவேனோ

சிலை நுதல்: வில் போன்ற நெற்றி; சிறுவிதம்: ஈனத்தனம்;

அருளநு போக குருபரனே உன்  அடியவர் வாழ  அருள்வோனே

அநுபோக: அனுபவ நெறி;

அரனிரு காதில் அருள்பர ஞான அடைவினை ஓதி அருள்பாலா

ஞான அடைவு: பிரணவப் பொருள்;

வெருவிடு சூரர் குல அடி வேரை விழவிடு சாசுவதி பாலா

வெருவிடு: அஞ்சுகின்ற; சாசுவதி: சாஸ்வதம்—நிரந்தரம்—ஆனவளான உமையம்மை;

மிடலுடலாளர் அடரசுர் மாள விடுமயில் வேல  பெருமாளே.

மிடல்: வலிமை; அடர் அசு(ர(ர்: போரிலே எதிர்த்த அசுரர்கள்; அயில்: கூரிய;

கருவெனு மாயை உருவினில் மூழ்கி வயதளவாக... கருவாக வளரும் சமயத்தில் கர்ப்பத்திலே ஏற்படும் மாயையான உருவத்திலே ஆழ்ந்து, அதை ஏற்று, வயதில் வளர்ந்து,

நிலமீதில் கலைதெரி வாணர் கலைபல நூல்கள் ... உலகத்திலே பல கலைகளை அறிந்த புலவர்கள் சொல்லிவைத்த பற்பலவிதமான கலைநூல்களை(க் கற்று),

வெகுவிதமாக கவிபாடித் தெருவழி போகி ... தெருக்களிலே பலவிதமான பாடல்களைப் பாடியபடி சென்று,

பொருளெனும் ஆசை திரவியம் நாடி நெடிது ஓடி ... பொருள்மீது ஏற்பட்ட ஆசையால் செல்வத்தைத் தேடி, நீண்ட தூரங்களைக் கடந்து சென்று(ம்);

சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி ... வில்லை ஒத்த நெற்றியை உடைய பெண்களின்மேல் ஏற்படும் மையலுக்குள்ளே முழுகியும்;

சிறுவிதமாக திரிவேனோ ... நான் ஈனத்தனமாக அலைந்து திரிவது சரிதானா?

அருள் அநுபோக குருபரனே உன் அடியவர் வாழ அருள்வோனே ... உன் அடியவர்களுக்கு அனுபவ நெறியாலே அருளைத் தருகின்ற குருபரனே, அடியவர்கள் வாழ அருள்பவனே!

அரன் இரு காதில் அருள்பர ஞாந அடைவினை ஓதி அருள்பாலா ... சிவனாருடைய இரண்டு காதுகளிலும் ஞான அடைவான பிரணவத்தின் பொருளை உபதேசித்து அருளிய பாலனே!

வெருவிடு சூரர் குலஅடி வேரை விழவிடு சாசுவதி பாலா ... அஞ்சியவர்களான சூரபத்மனுடைய குலத்தை வேரோடு விழவைத்தவனே!  நிரந்தரியான உமையம்மையின் குமாரனே!

மிடல் உடலாளர் அடர் அசுர் மாள ... வலிய உடலைக் கொண்டவர்களும் போரில் அடர்த்து எழுந்தவகளுமான அசுரகள் அழியும்படியாக,

விடும் அயில் வேல பெருமாளே. ... கூர்மையான வேலை எறிந்தவனான பெருமாளே!

சுருக்க உரை

அடியார்களுக்கு அனுபவ நெறியாலே அருளைத் தந்து அவர்களை வாழ்விக்கும் அருளாளனே! சிவனாருடைய இரண்டு செவிகளிலும் பிரணவப் பொருளை உபதேசித்து அருளிய சிறுவனே!  போரில் அஞ்சிய சூரபத்மனுடைய குலம் வேரோடு சாயும்படிச் செய்தவனே!  நிரந்தரியான உமையம்மையின் பாலனே!  வலிமையான உடலைக் கொண்டு, போரிலே அடர்த்தெழுந்தவர்களான அசுரர்கள் மடிந்துவிழும்படி கூர்மையான வேலை எறிந்தவனே!

தாயின் கர்ப்பத்திலே கருவாக உருவான சமயத்திலே நிகழ்ந்த மாயையால் இந்த உருவத்தை அடைந்து, இதைச் சுமந்து, வயதளவில் வளர்ந்து (வயதாலே மட்டும் வளர்ந்து); உலகில் பற்பல புலவர்கள் செய்த பற்பல வகையான கலைநூல்களைக் கற்றும்; தெருத்தெருவாக நல்ல பாடல்களைப் பாடியபடித் திரிந்தும்; பொருள்மீது ஏற்பட்ட ஆசையாலே செல்வம் சேர்ப்பதற்காக வெகுதொலைவான நாடுகளுக்குச் சென்றும்; வில்லை ஒத்த நெற்றியை உடைய மாதர்கள்மேல் ஏற்பட்ட மோகத்தால் அவர்கள் பின் திரிந்தும் நான் வாழ்வை அற்பமாகக் கழிக்கலாமோ?  (பிறந்து வளர்ந்து செல்வம் சேர்த்து, பெண்களைக் கலந்து—இப்படியே என் வாழ்நாளை நான் கழிக்கலாமோ?  அவ்வாறு கழியாமல் அருளவேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.