பகுதி - 289
பொய், கொலை, களவு, கள்ளுண்ணல், குரு நிந்தனை ஆகிய) ஐந்து பெரும் பாவங்களுக்கு இடம்தரும் மார்பகங்களின் மீது ஆசைப்பட்டு, வருந்திப் பேசி நான் தினந்தோறும் மெலிவடையாதபடி;
பதச் சேதம் | சொற் பொருள் |
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வண் க(ண்)ணர் ஆரவாரமும் அருள்வோராய் Advertisement
| வன்கணர்: கொடியவர்; அருள்வோராய்: அருள்பவர்களைப் போல்; |
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலை மாதர்
| வம்பிலே வாது: வீண் வாதம்; வந்தியா: வந்தித்து, புகழ்ந்து; |
பஞ்ச மா பாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு பஞ்சியே பேசி நாள் தோறும் மெலியாதே
| பஞ்சியே பேசி: வருத்தம் தோன்றப் பேசி; மெலியாதே: மெலிவடையாமல்; |
பந்தியாய் வான் உளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே
| பந்தியாய்: வரிசையாய்; |
அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில் அன்று தானே ஏவி வானவர் சிறை மீள
| உய்ஞ்சு: உய்ந்து; அயில்: வேல்; |
அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே
| மனோரதம்: விருப்பம்; மனோரதம் மிஞ்ச: விருப்பம் நிறைவேற; |
கொஞ்சவே காலின் மேவி சதங்கைதான் ஆட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே
| கொன்றையான்: கொன்றையைச் சூடியவரான பரமசிவன்; |
கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு குன்று தோறாடல் மேவிய பெருமாளே.
| கொந்து: கொத்து, வலித்தல் விகரம்; |

வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வண் க(ண்)ணார் ... கோடிக் கணக்கில் வஞ்சகத்தையே உள்ளத்துள் சேர்த்து வைத்துள்ள கொடியவர்கள்;

ஆரவாரமும் அருள்வோராய் வம்பிலே வாது கூறிகள் ... ஆரவாரத்தோடு, அருள்செய்பவர்களைப் போன்ற பாவனையை காட்டி, வீண்வாதம் செய்பவர்கள்;

கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர் ... கொஞ்சிப் பேசியும், காம விளையாட்டுகளைப் பற்றிப் புகழ்ந்துரைத்தும் ஆசையை ஊட்டுகினற பொதுமகளிர்களுடைய,

பஞ்ச மா பாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு பஞ்சியே பேசி நாள் தொறும் மெலியாதே ... (பொய், கொலை, களவு, கள்ளுண்ணல், குரு நிந்தனை ஆகிய) ஐந்து பெரும் பாவங்களுக்கு இடம்தரும் மார்பகங்களின் மீது ஆசைப்பட்டு, வருந்திப் பேசி நான் தினந்தோறும் மெலிவடையாதபடி;

பந்தியாய் வான் உளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே ... தேவர்கள் தொழுவதற்காக வரிசையாக நிற்கும் பெருமைத் தன்மை சேர்ந்த திருவடித் தாமரைகளை எனக்கு அருள்வாயாக.

அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில் அன்று தான் ஏவி வானவர் சிறை மீள ... சூரன் அஞ்சும்படியும், பிழைத்திருக்காதபடியும் முன்பொருநாள் வேலை வீசி, தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டு,

அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே ... அவர்களுடைய விருப்பத்தை அன்போடு நிறைவேற்றி, மேலான வாழ்வை அளித்தவனே! தேவர்கள் தலைவனே! பராபர முதல்வனே!

கொஞ்சவே காலின் மேவு சதங்கைதான் ஆட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே ... காலில் அணிந்துள்ள சதங்கை கொஞ்சுவது போல ஒலிக்கும்படி நடனமாடியவரும், கொன்றையை அணிந்தவருமான சிவபிரான் என்றென்றும் மகிழ்கின்ற பிள்ளையே!

கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு ... பூங்கொத்துகள் நிறைந்த சோலைகள் மிகுந்திருப்பதான குன்றுகளின் சூழல் உள்ள,

குன்று தோறாடல் மேவிய பெருமாளே. ... அனைத்துக் குன்றுகளிலும் வீற்றிருக்கும் பெருமாளே! (அல்லது ‘பூங்கொத்துகள் நிறைந்த சோலையான பழமுதிர்ச் சோலைக் குன்றத்தை ஒத்த சூழலுள்ள எல்லாக் குன்றுகளிலும் வீற்றிருக்கும் பெருமாளே!)

சுருக்க உரை

சூரன் அஞ்சும்படியும் அவன் உயிர்தப்பாதபடியும் அன்று வேலை வீசி, தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டு, அவர்களுடைய விருப்பத்தை அன்புடன் நிறைவேற்றி அவர்களுக்கு வாழ்வளித்த தேவர் தலைவனே! பராபர முதல்வனே! காலில் அணிந்துள்ள சதங்கைகள் கொஞ்சுவதைப் போல ஒலியெழுப்பும்பட நடனமாடுபவரும், கொன்றைப் பூவைச் சூடியவருமான சிவபெருமானுடைய குமரனே! பூங்கொத்துகள் நிறைந்த சோலைகள் மிகுந்திருக்கும் குன்றுச் சூழலில் உள்ள எல்லாக் குன்றுகளிலும் வீற்றிருக்கும் பெருமாளே! (அல்லது, பூங்கொத்துகள் நிறைந்த பழமுதிர்ச் சோலைக் குன்றத்தை ஒத்துள்ள எல்லாக் குன்றுகளிலும் வீற்றிருக்கும் பெருமாளே!)

மனம் முழுவதும் கோடிக்கணக்கான வஞ்சக எண்ணங்களைச் சேர்த்து வைத்திருக்கும் விலைமாதர்கள், (ஏதோ) அருள்புரிபவர்கள் போல பாவனை காட்டி, வீண்வாது பேசுவார்கள்; கொஞ்சிக் கொஞ்சிப் பேசி, காமலீலைகளைப் பற்றி உயர்வாகப் பேசிப் பேசி ஆசையை வளர்ப்பார்கள். இப்படிப்பட்டவர்களுடைய மார்பகங்களின் மீது ஆசையை வைத்து, நான் மெலிவடையாமல்,

தொழுவதற்காக தேவர்கள் வரிசையாக நிற்கும் பெருமையை உடையதான உன் திருவடித் தாமரையை எனக்குத் தந்தருள வேண்டும்.