முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 290

ரசதம் என்றால் வெள்ளி.  வெள்ளியங்கிரியான கயிலைக்கு ரசதகிரி என்றொரு பெயர் உண்டு.  கயிலைத் திருப்புகழ்

Updated On : 28 ஜூன், 2016 at 5:39 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:07 PM

ரசதம் என்றால் வெள்ளி.  வெள்ளியங்கிரியான கயிலைக்கு ரசதகிரி என்றொரு பெயர் உண்டு.  கயிலைத் திருப்புகழ் வரிசையில் இன்று காணப்போகும் பாடல் மிகச்சிறிய, மிக எளிய சந்த அமைப்பைக் கொண்டது.  இருந்தாலும் இதிலும் எழுத்துக் கணக்கு பிசகாது.  (ஒற்று நீக்கி) அடிக்கு ஒன்பது எழுத்துகள்; ஒவ்வொரு ஆறாம் எழுத்தும் வல்லொற்று. 

கவிபாடும் ஆற்றலை வேண்டுகிறது இன்றைய திருப்புகழ்.  அதுவும் முளைக்கும் போதே கவிதையை அருவியாய்ப் பொழிந்த திருஞான சம்பந்தரைப் போலக் கவிபாட வேண்டுமாம்.  ‘அரசரான (பிரபுவான) புகலி வித்தகர் போல’ப் பாடவேண்டுமென்கிறார்.  திருஞானசம்பந்தர் மீது குருநாதருக்கு உள்ள அபாரப் ப்ரேமை நன்கு புலனாகிறது.

தனதனனத்                   தனதான

புமியதனிற் ப்ரபுவான
      புகலியில்வித்           தகர்போல
அமிர்தகவித்  தொடைபாட
      அடிமைதனக்            கருள்வாயே
சமரிலெதிர்த் தசுர்மாளத்
   தனியயில்விட்             டருள்வோனே
நமசிவயப் பொருளானே
  ரசதகிரிப்                    பெருமாளே.

Advertisement

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/271213551&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.