முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 291

மரணமில்லாப் பெருவாழ்வைத் தரவல்ல அமிர்தம் ததும்பும் வாக்கால் கவிமாலைகளைப் பாடும் திறனை,

Updated On : 28 ஜூன், 2016 at 5:40 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:08 PM

பதச் சேதம்

சொற் பொருள்

புமி அதனில் ப்ரபுவான

Advertisement

புமி: பூமி, குறுக்கல் விகாரம்; ப்ரபு: பிரபு—அரசன்;

புகலியில் வித்தகர் போல

புகலி: சீகாழி; வித்தகர்: வித்தகரான ஞான சம்பந்தர்;

அமிர்த கவித் தொடை பாட

கவித் தொடை: கவிமாலை;

அடிமை தனக்கு அருள்வாயே

சமரில் எதிர்த்த சுர் மாள

சமரில்: போரில்; சுர்: சூர், சூரன் குறுக்கல் விகாரம்;

தனி அயில் விட்டு அருள்வோனே

தனி: ஒப்பற்ற; அயில்: கூர்மை, அதனால் கூரிய வேல்;

நமசிவயப் பொருளானே

பொருளோனே: மூலப் பொருளே

ரசத கிரி பெருமாளே.

ரசத(ம்): வெள்ளி; ரசதகிரி: வெள்ளி அம் கிரி, கயிலாயம்;

புமிய தனிற் ப்ரபுவான ... இந்தப் புவிமண்டலத்தின் அரசராகத்—தனிப்பெரும் தலைவராக;

புகலியில் வித்தகர்போல ... சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தரைப் போல,

அமிர்தகவித் தொடைபாட ... (மரணமில்லாப் பெருவாழ்வைத் தரவல்ல) அமிர்தம் ததும்பும் வாக்கால் கவிமாலைகளைப் பாடும் திறனை,

அடிமைதனக்கு அருள்வாயே ... அடிமையாகிய அடியேனுக்கும் அருள வேண்டும்.

சமரிலெதிர்த்த சுர் மாள ... போரில் எதிர்த்து நின்ற சூரன் இறந்துபடும்படியாக,

தனியயில்விட்டு அருள்வோனே ... ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவியவனே!

நமசிவயப் பொருளானே ... நமசிவய என்ற ஐந்தெழுத்தின் மூலப் பொருளாக விளங்குபவனே!

ரசதகிரிப் பெருமாளே. ... வெள்ளியங்கிரியான கயிலைமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

போரில் எதிர்த்துவந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்கள் மாளும்படியாக ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தியவனே!  ‘நமசிவய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலப் பொருளே!  வெள்ளியங்கிரியான கயிலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

இந்த பூமண்டலத்துக்குத் தலைவனாக சீகாழித் தலத்தில் தோன்றிய திருஞான சம்பந்தரைப் போல அமுதமயமான சொற்களால் கவிமாலை தொடுப்பதற்கான ஆற்றலை அடிமையாகிய எனக்கும் அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.