பகுதி - 292
ஒவ்வோரடியிலும் ஒரேயொரு நெட்டெழுத்தும், மற்ற அத்தனையும் குற்றெழுத்துகளாகவும் வருகின்ற சில பாடல்களைப்
ஒவ்வோரடியிலும் ஒரேயொரு நெட்டெழுத்தும், மற்ற அத்தனையும் குற்றெழுத்துகளாகவும் வருகின்ற சில பாடல்களைப் பார்த்திருக்கிறோம். இதற்கு மாறாக ஒவ்வொரு ஐந்தாம் எழுத்தும் நெடிலாக வரும் ‘ஆறுமுக மாறுமுக’ என்ற பாடலை நம்முடைய 128ம் தவணையில் பார்த்தோம். இன்றைக்குப் பார்க்கும் திருச்செந்தூர் திருப்புகழில் ஒவ்வொரு நான்காம் எழுத்தும் நெடிலாக அமைந்துள்ளது. அடிக்கு இருபத்திரண்டு எழுத்துகள். ஒருசில இடங்களில் மட்டும் பயிலும் இடையின மெய்களை (ய், ர், ல் போன்றவை) தவிர்த்து பாடல் முழுவதிலும் எந்த மெய்யெழுத்தும் இல்லை.
அருணகிரியாரின் பாடல்களில் பெரும்பான்மையானவை உலக இன்பங்களைக் கோருவதில்லை. அறிவு, பக்தி, ஞானம், மோனநிலை, முக்தி என்பன போன்ற மேன்மையானவற்றையும், புகழ், வாக்கு வன்மை போன்றவற்றையுமே இறைவனிடம் கோருபவவை. இன்றைய பாடல் ‘வாழ்வு உற’ என்று குறிக்கப்பட்டுள்ள பாடல். பாடலைப் பார்ப்போம்.
தானன தானன தானன தானன
தானன தானன தனதனா
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு பெருமாளே.
Advertisement
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/272105627&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>