பகுதி - 285
பாண்டியனுக்கு நெடுநாளாக இருந்த கூனலும் பின்னால் வந்த ஜுரமும் பஞ்சாகப் பறக்கும்படியும்; வாதிட்டு நின்ற சமண ஊமையர், அவர்கள் கையில் பற்றிய
பதச் சேதம் | சொற் பொருள் |
வஞ்சக லோப மூடர் தம் பொருள் ஊர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பல பாவின் Advertisement
| லோப: கருமியர்; பொருள் ஊர்கள்: பொருளையும் ஊர்களையும்; மஞ்சரி, கோவை தூது: சிற்றிலக்கிய வகைகள்; |
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே
| வண் புகழ்: வள்ளல் தன்மையால் புகழடைந்த; இசை: புகழ்; வாது கூறி: சபதப் பேச்சுகளை சொல்லி; வந்தியர்: அரச சபையில் புகழ் பாடுபவர்கள்; |
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும்
| நீபம்: கடப்ப (மாலை); மயூரம்: மயில்; |
செம் தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறு செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே

பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர்
| பஞ்சவன்: பாண்டியன்; நீடு கூனும்: நெடுநாளாக இருந்த கூனலும்; ஒன்றிடு தாபம்: பின்னால் வந்து சேர்ந்த ஜுரமும்; பஞ்சற: பஞ்சாகப் பறக்க; வாது கூறும்: வாதிடும்; சமண் மூகர்: சமண ஊமையர்; |
பண்பு அறு பீலியோடு வெம் கழு ஏற ஓது பண்டித ஞான நீறு தருவோனே
| பண்பறு: மேன்மை அழிந்த; பீலி: மயிற்பீலி (சமணர் வைத்திருப்பது); பண்டித: ஞான பண்டிதரான திருஞான சம்பந்தராக அவதரித்த முருகன்; |
குஞ்சரம் யாளி மேவும் பைம் புனம் மீது உலாவு குன்றவர் சாதி கூடி வெறி ஆடி
| குஞ்சரம்: யானை; பைம்புனம்: பசுமையான தினைப்புனம்; குன்றவர் சாதி: மலை வேடர்கள்; |
கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு குன்று தொறாடல் மேவு பெருமாளே.
| அவரோடு வீறு: அவர்களோடு விளங்கும்; |

வஞ்சக லோப மூடர் ... வஞ்சர்களும் கருமியருமான மூடர்களுடைய,

தம்பொரு ளூர்கள் தேடி ... பொருளுக்காக அவர்களுடைய ஊர்களைத் தேடிச் சென்று,

மஞ்சரி கோவை தூது பலபாவின் ... மஞ்சரி, கோவை, தூது முதலிய சிற்றிலக்கியங்களில் பல பாடல்களால்,

வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி ... வள்ளல் தன்மையால் பெரும்புகழடைந்த பாரியென்றும் காரியென்னும் அவர்களைப் புகழ்ந்து சூளுரைத்துப் பேசி,

வந்தியர் போல வீணிலழியாதே ... அரச சபையில் வந்தித்துப் பாடுவதற்கே பணியில் அமர்த்தப்பட்டுள்ளவர்களைப் போல வீணாக அழிந்து போகாமல்,

செஞ்சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை ... சிவந்த திருப்பாதங்களையும்; நாதத்தை உடையதான கிண்கிணியையும்; கடப்ப மலர்மாலையையும்;

திண்டிறல் வேல்மயூர முகமாறும் ... உறுதியானதும் ஆற்றல் வாய்ந்ததுமான வேலையும்; மயிலையும்; ஆறுமுகங்களையும்,

செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ... தினந்தோறும் செந்தமிழால் பாடி வாழ்வைப் பெற,

ஞானமூறு செங்கனி வாயிலோர்சொல் அருள்வாயே ... ஞானம் ஊறுவதான உன்னுடைய சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு மொழியைச் சொல்லியருள வேண்டும்.

பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சற... பாண்டியனுக்கு நீண்ட நாட்களாக இருந்த கூனையும், பின்னால் வந்து சேர்ந்த சுரத்தையும் பஞ்சாய்ப் பறக்கச் செய்து;

வாது கூறு சமண்மூகர் ... வாதத்தில் இறங்கினாலும் முழுமையாகப் பேச முடியாத ஊமைகளான சமணர்கள் தங்களுடைய,

பண்பறு பீலி யோடு வெங்கழு வேற ... மேன்மை அழிந்த மயிற்பீலியோடு கழுவில் ஏறும்படியாக,

ஓது பண்டித ஞான நீறு தருவோனே ... பதிகங்களைப் பாடியும் ஞானத் திருநீற்றைத் தந்தும் நின்றவரான திருஞான சம்பந்தராக அவதரித்தவனே!

குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு ... யானைகளும் யாளிகளும் இருப்பதான பசிய தினைப்புனத்திலே உலவுபவர்களான,

குன்றவர் சாதி கூடி வெறியாடி ... மலை வேடர் கூட்டங்கள் ஒன்றாகக் கூடி, வெறியாட்டம் ஆடி,

கும்பிட நாடி வாழ்வு தந்து அவரோடு வீறு... உன்னை வணங்கவும், அவர்கள் நாடிய வாழ்வைத் தந்து, அவர்களோடு ஒன்றாக விளங்கி,

குன்றுதோ றாடல் மேவு பெருமாளே. ...குன்று தோறும் திருவிளையாடல் புரிந்தருளும் பெருமாளே!

சுருக்க உரை

பாண்டியனுக்கு நெடுநாளாக இருந்த கூனலும் பின்னால் வந்த ஜுரமும் பஞ்சாகப் பறக்கும்படியும்; வாதிட்டு நின்ற சமண ஊமையர், அவர்கள் கையில் பற்றிய மயிற்பீலியோடு கழுமரத்தில் ஏறும்படியும்; தேவாரப் பதிகங்களைப் பாடியும்; திருநீற்றின் புகழினைப் பரப்பியும் நின்ற திருஞான சம்பந்தராக அவதரித்தவனே! யானையும் யாளியும் இருக்கும் தினைப்புனத்தில் ஒன்றுகூடும் வேடுவர்கள் வெறியாடி உன்னைத் துதிக்க, அவர்கள் விரும்பும் வாழ்வைத் தந்து—அவர்களுடைய குலமகளான வள்ளியை மணந்து—மலைகள் தோறும் விளையாடல் புரியும் பெருமாளே!

வஞ்சகர்களையும் கருமியர்களையும் அவர்களுடைய பொருளுக்காகத் தேடிச் சென்று, பலவிதமான தமிழ்ப் பாவினங்களால்—புகழ்வதற்கென்றே அரச சபையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள வந்தியர்களைப் போல—அவர்களைப் பாரி என்றும் காரி என்றும் புகழ்ந்துபாடி, அழிந்து போகாமல்,

உன்னுடைய சிவந்த திருவடிகளையும்; அதில் ஒலிக்கும் கிண்கிணியையும்; கடப்ப மாலையையும்; வலிய வேலையும்; மயிலையும்; ஆறு திருமுகங்களையும் செந்தமிழ்ப் பாக்களால் நான் என்றென்றும் பாடி உய்ந்திடுமாறு நீ உன்னுடைய கனிவாயால் ஒப்பற்ற உபதேசச் சொல்லை எனக்கு போதித்து அருள வேண்டும்.