முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 183

யாகங்களின் தலைவனும், வலாசுரனை வதைத்தவனுமான இந்தின் மகிழ்ச்சியடையும் அழகனே!

Updated On : 17 மார்ச், 2016 at 11:20 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:18 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி அகரம்: எழுத்தின் முதல்; அதிபன்: தலைவன்; அதிகம்: (அனைத்துக்கும்) மேம்பட்டவன்; அகம்: ‘நான்’ ஆகிய உட்பொருள்;
அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய் அயன்: பிரமன்; அரி: திருமால்; அரன்: சிவன்;
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே இகரம்: இ-கரம்— அண்மையில் இருப்பதாகிய அனைத்தும்; எவைகளும்: எல்லாமும்;
இரு நிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும் இருநிலம்: பெரிய நிலம்—பூமி;
மக பதி ஆகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே மகபதி: மகம்—யாகம்; நூறு அசுவமேதங்களைச் செய்து இந்திர பதவி அடைந்ததால் யாகங்களின் தலைவன்; மருவும்: விளங்கும்; வலாரி: வலன் என்ற அசுரனைக் கொன்றவன்—இந்திரன்;
வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே வனம் உறை வேடன்: அந்திமான் என்னும் கதிர்காமத் தலத்து வேடன் (விளக்கத்தை நேற்றைய தவணையில் காணவும்);
செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே செககண சேகு: ஒலிக்குறிப்புகள்
திரு மலிவான பழமுதிர் சோலை மலை மிசை மேவும் பெருமாளே. திரு: செல்வம்; மலிவான: நிறைந்ததான;

அகரமும் ஆகி ... ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று குறளிலே சொல்லப்பட்டது போல எழுத்துகளுக்கும் (ஆதிபகவன் முதற்றே உலகு என்பதுபோல உலகுக்கெல்லாம்) முதன்மையாகி;

அதிபனும் ஆகி ... அனைத்துக்கும் தலைவனாகி;

அதிகமும் ஆகி ... எதற்கும், எல்லோருக்கும் மேற்பட்டவனாகி;

அகமாகி ... ஒவ்வொருக்கும் உள்ளே உறைவதான ‘நான்’ என்னும் பொருளாகி;

(நானெனும் பொய்யை நடத்துவோன் நான்—பாரதி)

அயனென வாகி ... பிரமனாகி, படைப்புத் தொழில் செய்து;

அரியென வாகி ... திருமாலாகிக் காத்து;

அரனென வாகி ... ருத்திர மூர்த்தியாகி அனைத்தையும் அழித்து;

அவர் மேலாய் ... இந்த மூவருக்கும் மேற்பட்ட பொருளாகி;

இகரமும் ஆகி ... இங்கே—அருகிலே—உள்ள பொருட்களாகி;

எவைகளும்ஆகி ... எல்லா இடங்களிலும் உள்ளவையும் ஆகி;

இனிமையும் ஆகி ... இனிமையே வடிவெடுத்தவனாகி;

வருவோனே ... வருபவனே

இருநில மீதில் ... பெரியதாகிய இந்தப் புவியில்,

எளியனும் வாழ ... எளியேனான அடியேனும் வாழும்படியாக

எனதுமுன் ஓடி வரவேணும் ... என் முன்னே ஓடோடி வரவேண்டும்.

மகபதி ஆகி ... வேள்விகளின் தலைவனானவனும்;

(மகம் என்றால் வேள்வி.  நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்பவன் இந்திர பதவி பெறுகிறான்.  எனவே இந்திரன் வேள்வியின் தலைவன் எனப்படுகிறான்)

மருவும் வலாரி ... (பகைவனாக) விளங்கிய வலன் என்ற அசுரனை வதைத்தவனுமான இந்திரனுக்கு,

மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியையும் களிப்பையும் உண்டாக்குகின்ற,

வடிவோனே ... அழகான வடிவத்தைக் கொண்டவனே!

(தேவானையின் தகப்பன் என்ற முறையிலே இந்திரனும் இன்னொரு மாமன்தானே.)

வனமுறை வேடன் ... காட்டில் வசித்த (அந்திமான் என்ற) வேடன்

(பிரமன் சாபம்பெற்று கதிர்காமத்தில் அந்திமான் என்ற வேடனாகப் பிறந்த செய்தியை நேற்று பார்த்தோம்.)

அருளிய பூஜை மகிழ் ... செய்த பூசையால் மகிழ்ந்தவனே!

கதிர்காமம் உடையோனே ... (அந்த வேடன் வாழ்ந்த) கதிர்காமத்தை உன் தலமாகக் கொண்டவனே!

செககண சேகு தகுதிமி தோதி திமி என... என்ற தாளத்தோடு

ஆடு மயிலோனே ... ஆடுகின்ற மயிலை வாகனமாகக் கொண்டவனே!

திருமலிவான ... செல்வமும் மங்களகரமும் நிறைந்த,

பழமுதிர்சோலை மலை மிசை ... பழமுதிர்சோலையாம் மலையின் மேலே

மேவு பெருமாளே. ... வீற்றுள்ள பெருமாளே!

சுருக்க உரை

யாகங்களின் தலைவனும், வலாசுரனை வதைத்தவனுமான இந்தின் மகிழ்ச்சியடையும் அழகனே! கதிர்காமத்தில் வேடனாகப் பிறந்த பிரமன் செய்த பூசைகளால் மகிழ்ந்து அவனுக்கருள் செய்தவனே!  ஆடும் மயில் வாகனனே!  செல்வமும் மங்களகரமும் நிறைந்த பழமுதிர்சோலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

எழுத்துகளுக்கு அகரத்தைப் போல எல்லாப் பொருட்களுக்கும் முதற்பொருளாகி; எதற்கும் மேம்பட்டதாகி; ஒவ்வொருள்ளும் இருப்பதான ‘நான்’ என்னும் பொருளாகி; பிரமனாகிப் படைத்து; திருமாலாகிக் காத்து; ருத்திரனாகி அழித்து; இம்மூவர்க்கும் மேலான பொருளுமாகி; அருகில் இருப்பவையும்; தொலைவிலும் மற்ற எல்லா இடங்களிலும் இருப்பவையுமான எல்லாமும் ஆகி நிற்பவனே!  இனிமையே வடிவெடுத்தவனே! இந்தப் பெரிய உலகிலே எளியேனான அடியவன் வாழும்படியாக என்முன்னே விரைந்து வரவேண்டும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.