பகுதி - 185
வேதங்களில் ஊடாடிக் கலந்திருப்பரான பிரமன் அஞ்சி ஓடும்படியும்; மூதேவி விலகி ஓடும்படியும்;
பதச் சேதம் | சொற் பொருள் |
கரி புராரி காம ஆரி திரி புரம் ஆரி தீ ஆடி கயிலையாளி காபாலி கழை யோனி Advertisement
| கரி புராரி: யானையின் உடலை அழித்தவர்; காமன்: மன்மதன்; ஆரி: பகைவர்; திரிபுராரி: திரிபுரங்களை அழித்தவர்; தீயாடி: வடவமுகாக்கினியே அபிஷேகம் என்று கொள்பவர்*; கயிலையாளி: கயிலை மலையை உடையவர்; காபாலி: கபாலத்தைக் கையில் ஏந்தியவர்; கழையோனி: மூங்கிலுக்கு அடியில் தோன்றியவர்; |
கர உதாசன ஆசாரி பரசு பாணி பானாளி கணமொடு ஆடி கா யோகி சிவ யோகி
| கர: கையில்; உதாசன(ஹுதாசன): அக்கினி(யை); ஆசாரி: ஆசார்யர், குருநாதர்; பரசு: மழு, கோடரி; பாணி: கை(யில் ஏந்தியவர்); பானாளி: நள்ளிருளை உகப்பவர்; கணம்: பூதகணங்கள்; கா யோகி: யோகத்தை உடலாகக் கொண்டவர்; |
| பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி | பரி: பெரிய; அரா: பாம்பை; ஜடாசூடி: சடையில் சூடியவர்; பகரொணாத: சொல்லமுடியாத; பசு ஏறி: விடையை ஊர்தியாகக் கொண்டவர்; |
பரதம் ஆடி கான் ஆடி பர(ம) வயோதிக அதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ
| பரதம் ஆடி: பரத நாட்டியமாடுபவர்; கானாடி: (சுடு)காட்டில் ஆடுபவர்; பரவயோதிக அதீத: மூப்பைக் கடந்தவர்; பரம(ன்): சிவபெருமான்; ஞான ஊர்: ஞான நிலை; பூத: புகுத, புக, நுழைய; |
| சுருதி ஆடி தாதா வி வெருவி ஓட மூதேவி துரக கோப மீது ஓடி வட மேரு | சுருதி: வேதம்; சுருதியாடி தாதா: வேதங்களின் ஊடே கலந்துள்ள (பிரமன்); வி: மிக; வெருவி: அஞ்சி; துரக: விலக, அகல; |
சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி சுர(த்)தினோடு சூர் மாள உலகு ஏழும்
| வேலை: கடல்; அழுது அளாவி: அழுகை கலந்து; வாய் பாறி: வாய் கிழிந்து; சுரதினோடு: சுரத்தினோடு என்பதன் மெலித்தல் விகாரம்; ஓசையோடு; ச |
| திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள திரளினோடு பாறோடு கழுகு ஆட | திகிரி: வட்ட; மாதிர: திசை; ஆவார: மறைக்கின்ற; திகிரி: சக்ரவாளகிரி; வேதாளம்: பூதங்கள்; பாறு: பருந்து; |
| செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார திரு விராலியூர் மேவு பெருமாளே. | செரு: போர்; வான்: உயர்ந்த; நீப: கடப்ப(மாலை); பார: கனத்த பெருமையை உடைய; |
* சேமவட வாம்புயப் பரணசங் காபரண என்று வேல்விருத்தத்தின் எட்டாம் பாடலில் சொல்லப்படுவதைக் காணவும். வடவமுகாக்கினியே அவருடைய திருமஞ்சன நீர்.

கரிபுராரி ... யானையை அழித்து (உரித்து அதன் தோலைப் போர்த்துக் கொண்டவர்);

காமாரி ... மன்மதனுக்குப் பகைவனாகி அவனை எரித்தவர்;

திரிபுராரி ... திரிபுரங்களை அழித்தவர்;

தீயாடி ... வடவமுகாக்கினியை அபிஷேகமாகக் கொள்பவர் (அல்லது தீயை ஏந்திக் கொண்டு ஆடுபவர்)

கயிலையாளி ... கயிலை மலையின் இறைவர்;

காபாலி ...பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தியவர்;

கழையோனி ... மூங்கிலின் கீழே தோன்றியவர்;

(மூங்கிலுக்கு அடியில் சுயம்புவாகத் தோன்றியதால் வேய்முத்தர் என்ற பெயரை உடையவர்)

கர உதாசன ஆசாரி ... கையிலே அக்கினியை ஏந்திய ஆசார்யர், குருநாதர்;

பரசு பாணி ... கோடரியைக் கையில் ஏந்திருப்பவரும்

(பரசுவை ஏந்திய ராமன் பரசுராமன்)

பானாளி ... நள்ளிருளை உகப்பவர்;

கணமொடாடி ... பூதகணங்களோடு சேர்ந்துகொண்டு ஆடுபவர்;

காயோகி சிவயோகி ... யோகத்தையே உடலாகக் கொண்டவர்; சிவயோகி;

(கா யோகி என்பதைக் கா(ய) யோகி என்றும்; பஞ்சபூதங்களில் கலந்த யோகி என்றும்; காய்கின்ற — அழிக்கின்ற — யோகி என்றும் பொருள்கொள்ள முடியும்)

பரம யோகி மாயோகி ... பரம யோகி; மஹா யோகி;

பரி அரா ஜடாசூடி ... பெரிய பாம்பை சடாமுடியில் சூடியவர்

(பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக்குறின் —குறள். பரியது: பெரியது)

பகரொணாத மாஞானி ... (வார்த்தையாலே விவரித்துச்) சொல்ல முடியாத பெரிய ஞானி;

பசுவேறி ... ரிஷப வாகனர்;

பரதம் ஆடி கானாடி ... பரதம் ஆடுபவர்; சுடுகாட்டிலே நடனமாடுபவர்;

பர வயோதிக அதீத ... மேலானவர்; மூப்பைக் கடந்தவர்; (இத்தனைக்கும் உரியவரான)

பரம ஞானவூர் ... பரமசிவனுடைய ஞான நிலைக்குள்,

பூத அருளாயோ ... அடியேன் புகுமாறு முருகா, நீ அருள வேண்டும்.

சுருதி யாடி தாதா ... வேதங்களிலே ஊடாடிக் கலந்தவரான பிரமன்

வி வெருவி யோட ... மிகவும் அஞ்சி ஓடவும்;

மூதேவி துரக ... மூதேவி விலகி ஓடவும்;

கோப மீதோடி வடமேரு சுழல ... கோபம் மிகுவதால் வடக்கேயுள்ள மேருமலை சுழலவும்;

வேலை தீமூள ... கடலிலே தீப்பற்றிக் கொள்ளவும்;

அழுது அளாவி வாய்பாறி சுரதினோடு சூர் மாள ... ஓயாத அழுகை கலப்பதனால் (அழுது அழுது) வாய்கிழிந்து, அழுகையோசையோடு சூரன் மாயவும்;

உலகேழும் ... ஏழு உலகங்களோடு

திகிரி மாதிர ஆவார திகிரி சாய ...திசைகளை மறைக்கும் வட்டமான சக்ரவாளகிரியானது சாயவும்

(அண்டவெளியின் புற எல்லையாக இருப்பது சக்ரவாளகிரி)

வேதாள திரளினோடு பாறோடு கழுகாட ... பேய்க்கூட்டங்களோடு பருந்துகளும் கழுகுகளும் ஆடவும்;

செருவில் நாடு ... (அப்படிப்பட்ட) போர்க்களத்தை நாடிச் சென்றவனே!

வான் நீப ... உயர்ந்த, தூய கடம்ப மாலையை அணிந்தவனே!

கருணை மேருவே ... அருளாகிய மேரு மலையே!

பார திருவி ராலியூர்மேவு பெருமாளே. ... கனத்த பெருமையை உடையதான விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

வேதங்களில் ஊடாடிக் கலந்திருப்பரான பிரமன் அஞ்சி ஓடும்படியும்; மூதேவி விலகி ஓடும்படியும்; எழுகின்ற கோபத்தின் விளைவாலே வடமேரு சுழலும்படியும்; கடல் தீப்பற்றிக்கொள்ளவும்; அழுகையால் வாய் கிழிந்துபோய், அழுகையொலியோடு சூரன் மாளவும்; ஏழு உலகங்களையும் திக்குகளையும் மறைக்கின்ற சக்கரவாளகிரி சாயவும்; பேய்க்கூட்டங்களோடு பருந்துகளும் கழுகுகளும் ஆடுகின்ற போர்க்களத்தை நாடிச் சென்றவனே! தூய கடப்ப மாலையை அணிந்தவனே! கருணையாகிய மேரு மலையே! கனத்த பெருமையை உடைய விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

யானையை அழித்துத் தோலை உரித்துப் போர்த்தவர்; மன்மதனை எரித்தவர்; திரிபுரத்தை அழித்தவர்; பிரளயகாலத்து அக்கினியையே தன்னுடைய அபிஷேக நீர் என்று கொண்டவர்; கயிலைமலை நாதர்; பிரமகபாலத்தை ஏந்தியவர்; மூங்கிலினடியில் சுயம்புவாய்த் தோன்றியவர்; கையில் நெருப்பை ஏந்தியவர்; குருநாதர்; கோடரியை ஆயுதமாகக் கையில் தரித்தவர்; நடு இரவின் இருட்டை உகப்பவர்; பேய்க்கூட்டங்களோடு ஆடுபவர்; யோகத்தையே உடலாகக் கொண்டவர்; சவியோகி; பரமயோகி; மஹாயோகி; பெரிய பாம்பைச் சடாமுடியில் சூடியவர்; இடப வாகனத்தைக் கொண்டவர்; பரதம் ஆடுபவர்; சுடுகாட்டில் ஆடுபவர்; மேலானவர்; மூப்பைக் கடந்தவர் —இத்தனைக்கும் உரியவரான பரமசிவனாருடைய ஞான நிலைக்குள் நான் புகுமாறு அருள வேண்டும்.