முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 187

தாங்கள் பின்பற்றும் சமயங்களில் நெறியை மேற்கொண்டு ஒழுகும் பற்பல சமயங்களைச் சேர்ந்தோருடைய கட்டுப்பாடுகளால் சிதறாமலும்;

Updated On : 18 மார்ச், 2016 at 3:17 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:20 PM

பதச் சேதம்

சொற் பொருள்

கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களை உற்று மாயாது மந்த்ர வாத

Advertisement

கமை: (க்ஷமா) பொறுமை; சீர்கேடர்: ஒழுக்கமற்றவர்; வெகுதர்க்க: அதிகமாகத் தர்க்கம் பேசும்; கோலாலர்: கோலாகலம், ஆடம்பரம் நிறைந்தவர்கள்; களை உற்று: சோர்வடைந்து; மாயாது: மடியாமல்; மந்த்ரவாத: மந்திரவாதங்களைச் செய்யும்;

கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது கொண்டு பூணும்

கடைகெட்ட: இழிவு நிலையிலுள்ள; ஆபாதம் உறு: கீழான தன்மையை அடையும்; கோமாளர்: அழகாகப் பேசிக் கொம்மாளம் இடுபவர்கள்; கருமத்தின் மாயாது: செயல்களில் அழியாமல்; கொண்டு பூணும்: மேற்கொண்டு ஒழுகும்;

சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது சகளத்து உளே நாளு(ம்) நண்பு உளோர் செய்

சமயத்தர்: அந்தந்த சமயத்தைச் சேர்ந்தவர்களுடைய; ஆசார நியமத்தின்: சகளத்து உளே: சகளம்—உருவ வழிபாடு, உருவவழிபாட்டை பேமற்கொண்டு; நண்புளோர்: நட்பு, அன்பு, பக்தி உள்ளோர்;
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது சலன படா ஞானம் வந்து தாராய் சரியை, கிரியை யோகம் எனப்படும் நியமங்களை மேற்கொண்டு அழியாமல்;

அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல்

அமரில்: போர்க்களத்தில்; சுரா பானம்: கள்; திதி புத்ரர்: (கச்யபர் மனைவியருள்) திதிக்குப் பிறந்தவரான அசுரர்கள் (தேவர் அதிதியின் மக்கள்.  அதிதியின் மகன் என்பதால் ஆதித்யன் என்பது சூரியனுடைய பெயர்); ஆலோகம்: அறியாமை;

அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம்

அடம் இட்ட வேல்: பிடிவாதம் பிடித்த வேல்; அருண: சிவந்த; சிகா: சடை; நீலகண்ட: நீலமான மிடறு; பாரம்: பெருமை

மம பட்ச மா தேவர் அருமை சுவாமீ நிமல நிட்களா மாயை விந்து நாதம்

மம: என்னிடம்; பட்ச: அன்புடைய; மாதேவர்: சிவனார்; சுவாமீ: சுவாமியே; நிமல: தூயவனே; நிஷ்களா: உருவமற்றவனே; மாயை விந்து நாதம் வரசக்தி என்னும் இவற்றுக்கு;
வர சத்தி மேலான பர வத்துவே மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே. மேலான: மேற்பட்ட; பரவத்துவே: பர வஸ்துவே, பரம்பொருளே; மேலை வயலி: மேலை வயலூர்;

கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களை உற்று மாயாது ... பொறுமையற்றவர்களும்; ஒழுக்கம் கெட்டவர்களும்; மிகுதியாகத் தர்க்கம் பேசுகின்ற ஆடம்பரவாதிகளுமான பேர்களால் சோர்வடைந்து வீழாமலும்;

மந்த்ர வாத கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது ... மாய மந்திரங்களைச் செய்யும் மிக இழிவான நிலையிலுள்ள தாழ்மையடைந்தவர்களும்; சித்திரமாகப் (அழகாகப்) பேசிக் கொண்டாட்ட கொம்மாளம் போடுபவர்களுமான பேர்களுடைய செயல்களில் சிக்கிக்கொண்டு அழியாமலும்;

கொண்டு பூணும் சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது ... தாங்கள் பின்பற்றும் சமயங்களில் நெறியை மேற்கொண்டு ஒழுகும் பற்பல சமயங்களைச் சேர்ந்தோருடைய கட்டுப்பாடுகளால் சிதறாமலும்;

சகளத்து உளே நாளு(ம்) நண்பு உளோர் செய் சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது ... நாள்தோறும் உருவ வழிபாடு செய்து, பக்தியுடன் இருப்பவர்கள் செய்கின்ற சரியை, கிரியை, யோகம் எனப்படும் வழிகளை மேற்கொண்டு மாளாமலும்;

(சரியை எனப்படுவது, ஆலயங்களுக்கு அலகிடுதல், மெழுகுதல், விளக்கேற்றுதல், நந்தவனம் அமைத்தல், மலர் பறித்தல், மாலை தொடுத்தல் இவற்றைப் போன்ற கைங்கரியங்களைச் செய்வது. [தாத மார்க்கம், சாலோகம்];  கிரியை எனப்படுவது பூசைக்கான உபகரணங்களை அமைத்து அன்றாடக் காரியங்களைச் செய்வது. [புத்ர மார்க்கம், சாமீபம்]; யோகம் எனப்படுவது புலன்களை அடக்கி, பிராணவாயுவை சலனமில்லாது நிறுத்தி தியானத்தில் ஈடுபடுதல் [தோழ நெறி, சாரூபம்]; ஞானம் எனப்படுவது, அக, புறச் செயல்கள் ஏதுமில்லாமல் அறிவுரூபமாகச் செய்யும் வழிபாடு [சன்மார்க்கம், சாயுஜ்யம்] முதல் மூன்றும் வேண்டாது நான்காவதாகிய ஞானத்தைக் கேட்கிறார்.)

சலனப் படா ஞானம் வந்து தாராய் ... எந்தவிதமான சலனங்களுக்கும் ஆட்படாத ஞானத்தை என்னிடத்திலே வந்து அருளவேண்டும்.

அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல் ... கள்ளைக் குடித்துப் போரில் ஈடுபடுகின்ற (கச்யபர் மனைவியான) திதியின் மக்களான அசுரர்களுடைய அறியாமையானது உலகத்துக்கு ஓயாத துன்பத்தையே தரவும், அந்தத் துன்பத்தை அழித்தே தீருவேன் என்று

அடம் இட்ட வேல் வீர ... பிடிவாதம் பிடித்ததான வேலை ஏந்தியிருக்கும் வீரனே!

திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் மம பட்ச மா தேவர் அருமைச் சுவாமீ ... திருவொற்றியூர் நாதரும்; செம்பட்டை கொண்ட சடாமுடியும், நீலமிடற்றையும் பெருமையையும் உடையவரும்; என்மீது அன்புபூண்டவருமான மகாதேவருடைய அருமை வாய்ந்த சுவாமியே!

நிமல நிட்களா மாயை விந்து நாதம் வர சத்தி மேலான பர வத்துவே ... மாசற்றவனே!  உருவமில்லாதவனே!  மாயை, விந்து, நாதம், வரங்களைத் தரும் சக்தி இவற்றுக்கு மேற்பட்ட பரம்பொருளே!

மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே. ... மேலை வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே!  தேவர்களுடைய தம்பிரானே!

சுருக்க உரை

கள்ளைக் குடித்துப் போரில் ஈடுபடுபவர்களும், திதியின் புத்திரர்களுமான அசுரகளுடைய அறியாமை உலகத்துக்குப் பெரிய துக்கத்தை உண்டாக்க, அந்த துக்கத்தையும் அதற்குக் காரணமான அறியாமையைம ஒழித்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிப்பதான வேலை ஏந்தியவனே! திருவொற்றியூர் ஈசர்; செம்பட்டை கொண்ட சடாமுடியையும், நீலகண்டத்தையும் என்மீது மாறாத அன்பையும் கொண்டவரான மகாதேவருடைய அருமையான குமாரனே, சுவாமியே!  மாசற்றவனே! உருவமில்லாதவனே!  மாயை, விந்து, நாதம், வரம்தரும் சக்தி ஆகிய இவற்றுக்கெல்லாம் மேற்பட்ட பரம்பொருளே! மேலை வயலூர் என்ற தலத்தில் வீற்றுள்ள தேவர் தம்பிரானே!

பொறுமையற்றவர்களும்; ஒழுக்கக் கேடர்களும்; தருக்கம் பேசித் திரியும் ஆடம்பரம் மிக்கவர்களுமான பேர்வழிகளால் நான் சோர்வுற்று மாளாமலும்; மிக இழிவான நிலையிலுள்ள; தாழ்மை வாய்ந்த, அழகழகாகன — பொய்யான — பேச்சுகளைப் பேசிக் கொம்மாளமிடுபர்களின் செயல்களில் சிக்கிக்கொண்டு அழியாமலும்; தாம் மேற்கொண்டு ஒழுகும் அந்தந்தச் சமயங்களுக்கு உரிய ஆசார நியமங்களில் கட்டுப்பட்டு வீணாகமலும்; உருவ வழிபாட்டில் ஈடுபட்டு பக்தியோடு நாள்தோறும் சரியை, கிரியை, யோகம் எனப்படும் வழிமுறைகளை மேற்கொண்டர்களுடைய வழிகளிலே அகப்படாமலும்; எந்தவிதமான சஞ்சலங்களுக்கும் உட்படாத ஞானத்தை நீ எனக்கு (நேரடியாக வந்து) தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.