முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 188

திருஞான சம்பந்தர் முதல் அருணகிரிநாதரைத் தொடர்ந்து பற்பல பெரியோர்கள் பாடிய தலம் மயிலை. சம்பந்தர் பூம்பாவையை சாம்பலிலிருந்து எழுப்பிய தலம்.

Updated On : 23 மார்ச், 2016 at 5:38 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:21 PM

திருஞான சம்பந்தர் முதல் அருணகிரிநாதரைத் தொடர்ந்து பற்பல பெரியோர்கள் பாடிய தலம் மயிலை. சம்பந்தர் பூம்பாவையை சாம்பலிலிருந்து எழுப்பிய தலம். இங்கே வெளிப்பிராகாரத்தில் அருணகிரிநாதருக்கென்று ஒரு சன்னதி இருக்கிறது.

இந்தத் தலத்துக்கான பத்துத் திருப்புகழ்ப் பாக்களை குருநாதர் பாடி அருளியிருக்கிறார். இன்றைய பாடல் குக சாயுஜ்யத்தைக் கோருகிறது. சாலோக, சாமீப, சாரூப நிலைகளைக் கடந்தது சாயுஜ்யம். நிமிட நேரத்தில் விஷத்தை உண்டருளிய சிவனாருடைய சுதவர வரசுத, உன்னுடைய பதவியை — சாயுஜ்யத்தைத் — தருவதற்காக வரவேணும் என்று பாடல் கோருகிறது.

இதில் காளம் என்றால் நஞ்சு. அதிகாளம் என்பது கொடிய நஞ்சு, ஆலகாலம். ‘அதனை அதிகரண விதன பரிபுண’ என்றால்? பொருளை நாளைக்குக் காண்போம். ஒவ்வோரடியிலும் இறுதிச் சீரில் மூன்றாவது எழுத்து மட்டுமே நெடில்; மற்ற அனைத்து எழுத்துகளும் குறில். இடையின எழுத்துகள் அதிகமாக விரவி நடக்கிறது பாடல்.

தனன தனனதன தனன தனனதன
தனன தனனதன - தனதான

Advertisement

அமரு மமரரினி லதிக னயனுமரி
யவரும் வெருவவரு - மதிகாளம்
அதனை யதகரண விதன பரிபுரண
மமைய னவர்கரண - அகிலேச
நிமிர வருள்சரண நிபிட மதெனவுள
நிமிர சமிரமய - நியமாய
நிமிட மதனிலுண வலசி வசுதவர
நினது பதவிதர - வருவாயே
சமர சமரசுர அசுர விதரபர
சரத விரத அயில் - விடுவோனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
தரர ரரரரிரி - தகுர்தாத
எமர நடனவித மயிலின் முதுகில்வரு
மிமைய மகள்குமர - எமதீச
இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
மெமது பரகுரவ - பெருமாளே.

</p><p align="JUSTIFY"> </p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/254407780&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.