பகுதி - 239
வறியவர்களுக்கு வழங்குவதையும்; பலவிதமான சிறப்பான பூசைகளையும்; நல்ல நூல்களை ஓதுவதையும்; நல்ல குணங்களையும்;
பதச் சேதம் | சொற் பொருள் |
நாத விந்து கலை ஆதி நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம வெகு கோடி நாம Advertisement
| நாதம்: லிங்கம்; விந்து: பீடம்; நாதவிந்துகலாதி*: அடிக்குறிப்பைக் காணவும்; சாமி: தலைவன்; |
சம்பு குமாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்த மயூரா நமோநம பர சூரர்
| சம்பு: சிவன்; அந்தரி: ஆகாசவாணி, அம்பிகை; நாக பந்த மயூரம்: பாம்பைக் காலிலே கட்டியிருக்கும் மயில்; பரசூரர்: எதிரிகளான சூரர்கள்; |
சேத தண்ட விநோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமேநம தீர சம்ப்ரம வீரா நமோநம கிரி ராஜ
| சேத: சேதித்து, துண்டித்து, அழித்து; தண்ட: தண்டித்த; தீர: தைரியமுள்ள; சம்ப்ரம: களிப்புமிக்க; கிரிராஜ: மலைகளின் தலைவனே; |
தீப மங்கள ஜோதி நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள் தாராய்
| அம்பலம்: பரவெளி; தேவகுஞ்சரி: தேவானை; பாகா: பக்கத்தில் கொண்டவனே; |
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் ஈரமும் குரு சீர் பாத சேவையும் மறவாத
| ஈதல்: வறியார்க்கு அளித்தல்; கோலாலம்: கோலகலம்; ஓதல்: கற்றல்; ஈரம்: கருணை; குரு சீர்பாத சேவை: குருவின் பாதங்களுக்குத் தொண்டாற்றுவது; |
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டலம் மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளு(ம்) நாயக வயலூரா
| ஏழ்தலம்: ஏழுலகம்; மநோகர: மனத்துக்கு இன்பமான; ராஜகெம்பீர நாடு: சோழநாட்டின் ஒரு பகுதி; |
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டு அவரோடே முன் நாளினில் ஆடல் வெம் பரி மீது ஏறி மா கயிலையில் ஏகி
| ஆதரம்: அன்பு; ஆடல் வெம்பரி: ஆடும் தன்மையைக் கொண்ட கொடிய குதிரை; |
ஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர் கொங்கு வைகாவூர் நல் நாடு அதில் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
| ஆசு: ஆசுகவி; |

“நாதம்: லிங்கம்; விந்து: பீடம்; நாதவிந்துகலாதி என்பது இறைவன் பஞ்சமூர்த்தியாய்ப் பஞ்ச கிருத்தியத் தலைவராய்த் திகழ்வதைக் குறிக்கின்றது.” குகத்திரு தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்களின் குறிப்பு. இதன் விளக்கம் மிக நீண்ட ஒன்று. வாரியார் சுவாமிகள் செய்த திருப்புகழ் உரையின் இரண்டாம் தொகுதியில் முதற்பாடல் இது. வேண்டுவோர் அவருடைய விளக்கத்தைப் படித்து இன்புறவும்.

நாத விந்து கலாதீ நமோநம ... லிங்கமும் பீடமுமான சிவசக்தித் தத்துவங்களுக்கு மூலப் பொருளே போற்றி போற்றி;

வேத மந்த்ர சொரூபா நமோநம ... வேதங்களுக்கும் மந்திரங்களுக்கும் உருவமாக நிற்பவனே போற்றி போற்றி;

ஞான பண்டித சாமீ நமோநம ... ஞானமூர்த்தியாகத் திகழும் தலைவனே போற்றி போற்றி;

வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம ... பலகோடி திருநாமங்களையுடைய சிவபிரானுடைய குமாரனே போற்றி போற்றி;

போக அந்தரி பாலா நமோநம ... வினைப் பயன்களைத் துய்க்கச் செய்யும் உமாதேவியாரின் பாலகனே போற்றி போற்றி;

நாக பந்த மயூரா நமோநம ... தன்னுடைய காலில் பாம்பை அடக்கி பந்தித்த—கட்டிய—மயில்வாகனனே போற்றி போற்றி;

பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம ... எதிரிகளான சூரர்களை வெட்டி வீழ்த்தித் தண்டிக்கும் திருவிளையாடலைச் செய்தவனே போற்றி போற்றி;

கீத கிண்கிணி பாதா நமோநம ... இன்னிசை எழுப்பும் சதங்கைகளை அணிந்த திருப்பாதத்தவனே போற்றி போற்றி;

தீர சம்ப்ரம வீரா நமோநம ... தைரியமும் களிப்பும் மிக்க போர்வீரனே போற்றி போற்றி;

கிரிராஜ ... எல்லா மலைகளும் தலைவனே!

தீப மங்கள ஜோதீ நமோநம ... சுடர்விடும் தீபத்தின் மங்களகரமான திருவொளியே போற்றி போற்றி;

தூய அம்பல லீலா நமோநம ... தூய்மையான ஆகாசவெளியில் லீலைகளைச் செய்பவனே போற்றி போற்றி;

தேவ குஞ்சரி பாகா நமோநம ... பக்கத்திலே தேவானையை உடையவனே போற்றி போற்றி;

அருள்தாராய் ... எனக்குன் திருவருளைத் தந்தருள வேண்டும்.

ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் ... வறியவருக்கு அளித்தலையும்; பலவிதமான சிறப்பான பூசைகளையும்; நூல்களை ஓதுவதையும்; நல்ல குணத்தையும்; நன்னெறியையும்; நீதியையும்;

ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத ... கருணையையும்; குருவின் திருப்பாதங்களுக்குத் தொண்டாற்றுவதையும் என்றும் மறக்காத (சோழ நாட்டிலே),

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை ... ஏழுலகும் போற்றிப் புகழும்படியான காவேரி நதி பாய்வதால் செழிப்புற்று வளம் பெரு.குகின்ற,

சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும் நாயக ... சோழ மண்டலத்திலே மனத்துக்கு இன்பமான ராஜகெம்பீரம் என்னும் நாட்டை ஆளும் தலைவனே!

வயலூரா ... வயலூரில் வீற்றிருப்பவனே!

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை ... அன்பு பொருந்தியவரான ஆரூரருடைய—சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய—நட்பை,

சேர்தல் கொண்டவரோடே முனாளினில் ... சேர்ந்தவராக, முன்னொரு காலத்தில்,

ஆடல்* வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி ... ஆடுவதும் கொடிய விரைந்த தன்மை கொண்டதுமான குதிரை மீதேறி, கயிலைக்குப் போய்,

(ஆடுகின்ற தன்மையைக் கொண்டது என்பதால் குதிரைக்கு ‘ஆடல்மா’ என்றும் பெயர்)

ஆதி அந்தவுலா ஆசு பாடிய ... ஆசுகவியாக ஆதி உலா எனப்படும் திருக்கயிலாய ஞான உலாவைப் பாடியவரான,

சேரர் கொங்கு வைகாவூர் நனாடதில் ... சேரமான் பெருமான் நாயானாருடைய கொங்கு மண்டலத்திலுள்ள வைகாவூர் என்ற நல்ல நாட்டிலிருக்கின்ற,

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. ... திருவாவினன் குடியின் செல்வமாக வீற்றிருப்பவனே, தேவர்களுடைய பெருமாளே!

சுருக்க உரை

வறியவர்களுக்கு வழங்குவதையும்; பலவிதமான சிறப்பான பூசைகளையும்; நல்ல நூல்களை ஓதுவதையும்; நல்ல குணங்களையும்; ஒழுக்கத்தையும்; நீதியையும் எப்போதும் மறவாதவர்கள் வாழ்வதும்; ஏழுலகத்தாலும் போற்றப்படும் காவிரி பாய்வதால் வளம்பெருகியுள்ளதுமான சோழ நாட்டிலே, மனத்துக்கு இனிதான ராஜகெம்பீர நாட்டையாளும் நாயகனே! அந்நாட்டில் சிறப்புற்று விளங்கும் வயலூரில் கோவில்கொண்டிருப்பவனே! முன்னொரு நாளில், தன்னிடத்திலே மிகுந்த அன்பு பூண்டவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் கயிலாயத்துக்குச் சென்றபோது, வேகமும் தீரமும் மிக்க குதிரையில் ஏறிய சேரமான் பெருமான் நாயனார், திருக்கயிலையில் ஆதி உலா என்னும் பிரபந்தத்தை ஆசுகவியாகப் பாடினாரே, அவர் ஆண்ட கொங்குநாட்டிலே, வைகாவூரிலுள்ள திருவாவினன்குடியில் எழுந்தருளியிருப்பவனே! தேவர்கள் பெருமாளே!

நாதம், விந்து கலை என்பனவற்றுக்கு முதல்வனே போற்றி போற்றி! வேதங்களுக்கும் மந்திரங்களுக்கும் உருவமாகத் திகழ்பவனே போற்றி போற்றி! ஞான பண்டிதனே, தலைவனே போற்றி போற்றி! பலகோடி திருநாமங்களையுடைய சிவபெருமானாரின் திருமகனே போற்றி போற்றி! எல்லா உயிர்களும் அவரவர் வினைப்பயன்களை அனுபவிக்கச் செய்யும் போக சக்தியான உமாகுமாரனே போற்றி போற்றி! காலிலே பாம்புகள் சுற்றியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே போற்றி போற்றி! பகைத்து வந்த சூரபத்மனையும் அவனுடைய சேனைகளையும் அழித்த திருவிளையாடலைச் செய்தவனே போற்றி போற்றி! இன்னொலி எழுப்பும் சதங்கைகளை அணிந்த திருப்பாதனே போற்றி போற்றி! தைரியமும் களிப்பும் நிறைந்த வீரனே போற்றி போற்றி! சுடர்விடுகின்ற தீபத்தின் ஞானச் சுடராகத் திகழ்பவனே போற்றி போற்றி! அருளாகிய பரவெளியில் ஆனந்தக்கூத்தாடுபவனே போற்றி போற்றி! தேவானையம்மையை அருகில் கொண்டவனே போற்றி போற்றி! அடியேனுக்கு உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.