முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 240

வேப்பஞ்சந்தி என்ற திருத்தலத்துக்கான பாடல் இது. ‘இது வேப்பூரோ அல்லது வேறு தலமோ விளங்கவில்லை’ என்று உரையாசிரியர் தணிகைமணி வ சு செங்கல்வராய

Updated On : 12 மே, 2016 at 4:37 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:45 PM

வேப்பஞ்சந்தி என்ற திருத்தலத்துக்கான பாடல் இது. ‘இது வேப்பூரோ அல்லது வேறு தலமோ விளங்கவில்லை’ என்று உரையாசிரியர் தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் குறித்திருக்கிறார்.  சேலம் சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை வெளியிட்ட பதிப்பில் “சென்னை—திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்குத் தெற்கில் 24 கி.மீ. தொலைவில் உள்ள வேப்பூர், அருணகிரியார் பரவிய வேப்பஞ்சந்தி என்னும் தலமாகக் கருதலாம்.  இத்தலத்தில் ஞானஸ்கந்தமூர்த்தி காட்சி அளிக்கிறார்” என்ற குறிப்பு காணப்படுகிறது. Kaumaram.com தளத்தில், “இக்கோயில் இருக்குமிடம் - விருதாச்சலத்திலிருந்து 22 கிமீ மேற்கில், உளுந்தூர் பேட்டையிலிருந்து 24 கிமீ தெற்கில், தொளுதூரிலிருந்து 19 கிமீ வடக்கில். (இணைய பார்வையாளர் திரு. ஷண்முகம் நாகராஜன் அவர்களின் குறிப்பு)” என்று குறித்திருக்கிறார்கள். இனி பாடல்.

தாத்தந் தந்தத் தந்தத் தனனத்                  தனதான

நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற்             படியாதே
   நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப்         பதமீவாய்
வாட்டங் கண்டுற் றண்டத் தமரப்               படைமீதே
   மாற்றந் தந்துப் பந்திச் சமருக்               கெதிரானோர்
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப்                  பொருவோனே
   கூற்றின் பந்திச் சிந்தைக் குணமொத்        தொளிர்வேலா
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக்              கிளையோனே
   வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப்              பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/263754574&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.