பகுதி - 241
விண்ணிலுள்ள தேவர்களின் மெலிவுற்ற சேனையின்மேல், வஞ்சினம் உரைத்துக் கூட்டமாகப் போருக்கு வந்த அரக்கர்களுடைய கூட்டம், முன்னும்பின்னுமாகச் சிந்திச்
பதச் சேதம் | சொற் பொருள் |
நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே Advertisement
| நாட்டம்: விழி, பார்வை; குவடு: திரண்ட, உச்சி(யில்); |
நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய்
| நாட்டும்: நிலைநாட்டுகிற; அண்டம்: உலகம் (உலகமே கிடைக்கும்படியான); |
வாட்டம் கண்டுற்று அண்டத்து அமரப் படை மீதே
| வாட்டம்: மெலிவு; கண்டுற்று: கண்டு அடைந்து; அமரப் படை: தேவர்களுடைய சேனை; |
மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர்
| மாற்றம்: பேச்சு, வஞ்சினம், சூள் பந்தி: வரிசை, கூட்டம்; சமர்: போர்; எதிரானோர்: எதிர்த்தவர்கள்; |
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே
| கந்தி: கந்தித்தல்—முன்னும் பின்னுமாக; |
கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்த ஒளிர் வேலா
| கூற்றன்: யமன்; பந்தி: வரிசை, ஒழுங்கு தவறாத; |
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே
| வேட்ட(ம்): வேட்டது, விரும்பியது; தந்தி: யானை; |
வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே.

நாட்டம் தங்கிக் கொங்கைக் குவடில் படியாதே ... பார்வையும் மனத்தின் நாட்டமும் திரண்ட மார்பகங்களில் தோயாமல்,

நாட்டும் தொண்டர்க்கு அண்டக் கமலப் பதம் ஈவாய் ... (தங்கள் மனத்தை உன்மீது) நாட்டுகின்ற அன்பர்களுக்கு, உலகையே தரவல்லதான உன் தாமரைப் பாதங்களைத் தந்து அருளவேண்டும்;

வாட்டம் கண்டு உற்று அண்டத்து அமரப் படை மீதே ... மெலிவடைந்த; வானிலுள்ள தேவர்களின் சேனையின்மேல்,

மாற்றம் தந்து பந்திச் சமருக்கு எதிரானோர் ... வஞ்சினம் (சூள்) உரைத்து, வரிசையாகப் (கூட்டமாகப்) போருக்கு வந்த அரக்கர்களுடைய,

கூட்டம் கந்திச் சிந்திச் சிதறப் பொருவோனே ... கூட்டமானது முன்னும் பின்னுமாக சிந்திச் சிதறும்படி போரிடுபவனே!

கூற்றன் பந்திச் சிந்தைக் குணம் ஒத்த ஒளிர் வேலா ... யமனுடைய நேரான (நீதி தவறாத) மனத்தின் தன்மையைப் போல ஒளியோடு விளங்கும் வேலை ஏந்தியவனே!

வேட்டம் தொந்தித் தந்திப் பரனுக்கு இளையோனே ... (அடியார்கள்) வேட்டதை—விரும்பியதைத்—தரும் யானைமுகத் தொந்திப்பிரானுக்கு இளையவனே!

வேப்பம் சந்திக் கந்தக் குமரப் பெருமாளே. ... வேப்பஞ்சந்தித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

விண்ணிலுள்ள தேவர்களின் மெலிவுற்ற சேனையின்மேல், வஞ்சினம் உரைத்துக் கூட்டமாகப் போருக்கு வந்த அரக்கர்களுடைய கூட்டம், முன்னும்பின்னுமாகச் சிந்திச் சிதறியோடும்படிப் போரிட்டவனே! நீதி தவறாத யமனுடைய மனத்தின் தன்மையைப் போல ஒளிவீசும் வேலை ஏந்தியவனே! அடியார்களுடைய விருப்பங்களை நிறைவேற்றும் யானைமுகன்; தொந்திக் கணபதிக்கு இளையவனே! வேப்பஞ்சந்தித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

பார்வையையும் மனத்தின் நாட்டத்தையும் மங்கையரின் திரண்ட மார்பகங்களில் படியவிடாமல், மனத்தை உன்மீதே முழுமையாக நாட்டுகின்ற அடியார்கள், உலகத்தையே வேண்டினாலும் தரவல்லதாகிய உன்னுடைய கமலப் பாதங்களைத் தந்தருள்வாய்.