முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 242

இது சிதம்பரத் திருத்தலத்துக்கான திருப்புகழ்.  ‘உன்னுடைய தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டுகிறார்.  ‘அப்பா, அப்பா என்று நான் கதறுவது உன் காதில்

Updated On : 12 மே, 2016 at 5:48 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:46 PM

இது சிதம்பரத் திருத்தலத்துக்கான திருப்புகழ்.  ‘உன்னுடைய தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டுகிறார்.  ‘அப்பா, அப்பா என்று நான் கதறுவது உன் காதில் விழவில்லையா?  அப்படி என்னப்பா செய்து கொண்டிருக்கிறாய்?  பக்கத்திலிருக்கும் தேவியரை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாயோ?  எனக்கு உன்னைவிட்டால் வேறு யார் துணையென்று இருக்கிறார்கள்?’ என்றெல்லாம், நம்மில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இறைவனிடத்திலே உரிமையுடன் முறையிடுவோமோ அத்தனை உரிமையுடனும் முறையிடுகிறார்.  அடியார்கள் திருக்கூட்டத்தில் முதலானவராக நிற்கும் அவருக்கில்லாத உரிமையா! 

அவர் காணாத தரிசனமா, அவருக்குக் குறையும் உண்டா!  இந்தப் பாடல்களில் ஒலிக்கும் ஒவ்வொரு வேண்டுதலும் ஒவ்வொரு பிரார்த்தனையும் நம்போன்றோர் இறைவனை வழிபட வழிகாட்டுபவை.   இப்பாடலில் பல சொற்களை ஆழ்ந்து புரிந்து கொள்ளவேண்டும்.  ‘கஞ்சன்’ என்பது பொதுவாக ‘கம்ச’னைக் குறிப்பது.  சிலப்பதிகாரம் முதல் ஆண்டாள் வரை பற்பலர் கம்சனைக் கஞ்சன் என்று குறித்திருக்கிறார்கள்.  கஞ்சம் என்றால் தாமரை என்று பொருள்.  தாமரையில் அமர்ந்தவன் என்பதால், ‘கஞ்சன்’ என்பது பிரமனையும் குறிக்கும்.  இப்படிப் பல இடங்களுள்ளன. மிக அழகான பாடல்.  பாடலைப் பார்ப்போம்.

தந்தனத் தானதன தந்தனத் தானதன
தந்தனத் தானதன                   தந்ததான

நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
   நம்புதற் றீதெனநி                        னைந்துநாயேன்
நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை
   நங்களப் பாசரண                        மென்றுகூறல்
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
   உன்சொலைத் தாழ்வுசெய்து             மிஞ்சுவாரார்
உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்
   உம்பருக் காவதினின்                    வந்துதோணாய்
கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு
   கண்களிப் பாகவிடு                      செங்கையோனே
கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
   கஞ்சுகப் பான்மைபுனை                 பொன்செய்தோளாய்
அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
   அந்தரத் தேறவிடு                       கந்தவேளே
அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
   அம்பலத் தாடுமவர்                      தம்பிரானே.

Advertisement

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/263761796&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.