முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 593

பழனி மலையில்

Updated On : 30 ஜூன், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:48 PM

பதச் சேதம்

சொற் பொருள்

வசனம் மிக ஏற்றி மறவாதே

Advertisement

 

வசனம்: (மந்திரச்) சொல்; மிக ஏற்றி: மிகவும் (உருவேற) ஜெபித்து; மறவாதே: உன்னை மறவாமல்;

மனது துயர் ஆற்றில் உழலாதே

 

துயர் ஆற்றில்: துயரத்தைத் தரும் வழியில்;

இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே

 

இசை பயில்: திரும்பத் திரும்பச் சொல்லிப் பயில்வதான; ஷடாக்ஷரம்: ஆறெழுத்து மந்திரம்;

இகபர செளக்யம் அருள்வாயே

 

 

பசு பதி சிவாக்யம் உணர்வோனே

 

 

பழநி மலை வீற்று அருளும் வேலா

 

 

அசுரர் கிளை வாட்டி மிக வாழ

 

 

அமரர் சிறை மீட்ட பெருமாளே.

 

 

வசனமிக ஏற்றி மறவாதே... (மந்திரச்) சொற்களை மிக அதிகமாக ஜபித்து, (அப்படி ஜபிப்பதிலேயே) உன்னை மறந்துவிடாமலும்;

மனது துயர் ஆற்றில் உழலாதே... என்னுடைய மனமானது துயரத்தை உண்டாக்குகின்ற வழிகளிலே போய்த் திரியாமலிருக்கவும்;

இசைபயில் ஷடாட்சரம் அதாலே... திரும்பத் திரும்பச் சொல்லிப் பயில்வதான ஆறெழுத்து மந்திரத்தின் பயனால்,

இகபரசெள பாக்யம் அருள்வாயே... இம்மைக்கும் மறுமைக்குமான நல்வாழ்வை அருள்புரிய வேண்டும்.

பசுபதி சிவாக்யம் உணர்வோனே... சிவபிரானுடைய வேத சிவாகமங்களை அறிந்தவனே!

பழனிமலை வீற்(று) அருளும் வேலா... பழனி மலையில் வீற்றிருந்து அருள்பவனே! 

அசுரர்கிளை வாட்டி மிகவாழ அமரர்  சிறை மீட்ட பெருமாளே... அசுரர்களுடைய கூட்டத்தை ஒடுக்கியும்; தேவர்கள் வாழ்வுபெறும்படியாக சிறையினின்றும் விடுவித்தருளிய பெருமாளே!

சுருக்க உரை

சிவபெருமானுடைய வேத ஆகமங்களை அறிந்தவனே!  பழனி மலையில் வீற்றிருந்தருளும் வேலனே!  அசுரர் கூட்டங்களை ஒடுக்கியும்; தேவர்கள் நன்றாக வாழுமாறு அவர்களைச் சிறையிலிருந்து விடுவித்தும் அருளிய பெருமாளே!

ஜபத்திலே மனத்தைச் செலுத்தி அதிகமாக ஜபித்து, அவ்வாறு ஜபிக்கின்ற செயலிலேயே ஈடுபட்டுக் கிடப்பதால் உன்னை மறந்துவிடாமல் இருப்பதற்கும்; மனத்தைத் துயரத்தில் செலுத்துவதான வழிகளில் திரியாமல் இருப்பதற்கும் திரும்பத் திரும்பச் சொல்லிப் பயில்வதான ‘சரவண பவ’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தின் பயனாக இம்மை, மறுமைச் சுகங்களை அடியேனுக்கு அருள்புரிய வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.