முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 692

உள்ளத்திலே புகுந்தருளவேண்டும்

Updated On : 15 நவம்பர், 2017 at 9:28 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:37 PM

‘உள்ளத்திலே புகுந்தருளவேண்டும்’ என்று இறைவனை வேண்டுகின்ற இந்தப் பாடல் முள்வாய் என்னும் தலத்துக்கானது.  இத்தலம் ஆந்திராவில் சித்தூருக்கு அருகில் உள்ளது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒரு குறில், ஒரு கணக்கில் சேராத மெல்லொற்று, ஒரு நெடில் என மூன்றெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஐந்து குற்றெழுத்துகளையும் கணக்கில் சேராத இரண்டு மெல்லொற்றுகளையும் கொண்டவை.


தன்னா தனந்தனந்த தன்னா தனந்தனந்த
      தன்னா தனந்தனந்த                 தனதான

Advertisement

மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து
         வெவ்வே றுழன்று ழன்று         மொழிகூற

      விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க
         மென்னா ளறிந்த டைந்து         உயிர்போமுன்

பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து
         பொய்யார் மனங்கள் தங்கு       மதுபோலப்

பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்கு
         புன்னா யுளுங்க வின்று          புகுவாயே

பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து
         பன்னா கணைந்து சங்க           முறவாயிற்

பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்று
         பண்ணூ துகின்ற கொண்டல்      மருகோனே

முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து
         முன்னோர் பொருங்கை யென்று முனையாட

மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மா தர்வந்தி றைஞ்சு
         முள்வாய் விளங்க நின்ற         பெருமாளே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.