பகுதி - 796
நற்றாய் இரங்கல் துறையில் பெருமான்..
நற்றாய் இரங்கல் துறையில் பெருமான் மீது காதல் கொண்ட மகளைக் காக்குமாறு தாய் வேண்டுகின்ற பாவனையில் அமைந்தது இப்பாடல்.
அடிக்கு ஒற்றொழிது 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். எல்லாச் சீர்களிலும் ஒன்றேபோல மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.
தனனத் தனனத் தனனத் தனனத்
Advertisement
தனனத் தனனத் தனதான
பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்
துகளிற் புதையத் தனமீதே
புரளப் புரளக் கறுவித் தறுகட்
பொருவிற் சுறவக் கொடி வேள்தோள்
தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்
செயலற் றனள்கற் பழியாதே
செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்
தெரிவைக் குணர்வைத் தரவேணும்
சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்
சுரருக் குரிமைப் புரிவோனே
சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்
சுருதிப் பொருளைப் பகர்வோனே
தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்
தனிநெட் டயிலைத் தொடும்வீரா
தவளப் பணிலத் தரளப் பழனத்
தணிகைக் குமரப் பெருமாளே.