பகுதி - 804
‘உனது நடன தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
‘உனது நடன தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது. பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இப்பாடலல்லாமல் சிதம்பரம், திருத்தணிகை, திருச்செந்தூர், கொடுங்குன்றூர் ஆகிய தலங்களிலும் இறைவனுடைய திருநடனக்கோலத்தை தரிசிக்கவேண்டுமென்று குருநாதர் பாடியுள்ளார்.
அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.
தத்தனத் தனதனத்த தனதான
Advertisement
நித்தமுற் றுனைநினைத்து மிகநாடி
நிட்டைபெற் றியல்கருத்தர் துணையாக
நத்தியுத் தமதவத்தி னெறியாலே
லக்யலக் கணநிருத்த மருள்வாயே
வெற்றிவிக் ரமவரக்கர் கிளைமாள
விட்டநத் துகரனுக்கு மருகோனே
குற்றமற் றவருளத்தி லுறைவோனே
குக்குடக் கொடி தரித்த பெருமாளே.